டெக்னீசியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பொது | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பெயர், குறி எழுத்து, தனிம எண் |
டெக்னேட்டியம், Tc, 43 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வேதியியல் பொருள் வரிசை |
பிறழ்வரிசை மாழைகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நெடுங்குழு, கிடை வரிசை, வலயம் |
7, 5, d | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தோற்றம் | மாழைபோன்ற வெண் சாம்பல் |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அணு நிறை (அணுத்திணிவு) |
[98](0) g/mol | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
எதிர்மின்னி அமைப்பு |
[Kr] 4d5 5s2 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சுற்றுப் பாதையிலுள்ள எதிர்மின்னிகள் (எலக்ட்ரான்கள்) |
2, 8, 18, 13, 2 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இயல்பியல் பண்புகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இயல் நிலை | திண்மம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அடர்த்தி (அறை வெ.நி அருகில்) |
11 கி/செ.மி³ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உருகு வெப்பநிலை |
2430 K (2157 °C, 3915 °F) |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கொதி நிலை | 4538 K (4265 °C, 7709 °F) |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நிலை மாறும் மறை வெப்பம் |
33.29 கி.ஜூ/மோல் (kJ/mol) |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வளிமமாகும் வெப்ப ஆற்றல் |
585.2 கி.ஜூ/மோல் kJ/mol | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வெப்பக் கொண்மை |
(25 °C) 24.27 ஜூ/(மோல்·K) J/(mol·K) |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அணுப் பண்புகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
படிக அமைப்பு | hexagonal | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆக்ஸைடு நிலைகள் |
7 (கடும் காடிய ஆக்ஸைடு) |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
எதிர்மின்னியீர்ப்பு | 1.9 (பௌலிங் அளவீடு) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Electron affinity | -53 kJ/mol | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மின்மமாக்கும் ஆற்றல் | 1st: 702 kJ/mol | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2nd: 1470 kJ/mol | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
3rd: 2850 kJ/mol | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அணு ஆரம் | 135 pm | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அணுவின் ஆரம் (கணித்) |
183 pm | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கூட்டிணைப்பு ஆரம் | 156 pm | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வேறு பல பண்புகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
காந்த வகை | மென்காந்தத் தன்மை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வெப்பக் கடத்துமை |
(300 K) 50.6 வாட்/(மீ·கெ) W/(m·K) |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
CAS பதிவெண் | 7440-26-8 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
குறிபிடத்தக்க ஓரிடத்தான்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மேற்கோள்கள் |
டெக்னீசியம் (ஆங்கிலம்: Technetium (IPA: /tɛkˈniʃɪəm/ or /tɛkˈniːʃɪəm/) ஒரு வேதியியல் தனிமம். நிலையான ஓரிடத்தான்கள் இல்லாத தனிமங்களிலேயே எடை குறைவான தனிமம். இதன் வேதியியல் குறியீடு Tc. இதன் அணுவெண் 43 மற்றும் இதன் அணுக்கருவில் 55 நொதுமிகள் உள்ளன. இத் தனிமம் இயற்கையில் கிடைக்காதது. இதனை முதன்முதலாக செயற்கையாக 1925 ஆம் ஆண்டு உருவாக்கினர். இதுவே செயற்கையாக உருவாக்கிய முதல் தனிமம். இதனாலேயே இதனை "செயற்கையாக செய்யப்பட்டது" என்னும் பொருள்பட கிரேக்க மொழியில் τεχνητός, (டெக்னிட்டோஸ்) என்று பெயர் சூட்டினர். வால்ட்டர் நோடாக், ஈடா நோடாக், ஆட்டோ பெர்கு (Walter Noddack, Ida Noddack and Otto Berg) ஆகிய மூவரும் கொலம்பைட் என்னும் கனிமத்தின் மீது எதிர்மின்னிகளை மோதச் செய்து புதிய இத் தனிமத்தை உருவாக்கினர். இது பார்ப்பதற்கு வெண்சாம்பல் நிறத் தோற்றம் கொண்ட பிறழ்வரிசை மாழை. இதன் வேதியியல் பண்புகள் ரேனியத்திற்கும் மாங்கனீசுக்கும் இடைப்பட்டது. நிலையற்று, குறுகிய-காலம் மட்டுமே இருக்கும் காமாக் கதிர் உமிழும் இதன் ஓரிடத்தான்களாகிய 99mTc (technetium-99m)டெக்னீசியம்-99 என்பது மருத்துவத்தில் (அணுப்பண்பு மருத்துவ முறைகள்) பலவாறான நோய் சுட்டும்குறிகளைக் கண்டுபிடிக்கப் பயன்படுகின்றது. டெக்னீசியத்தின் சேர்மமாகிய பெர்-டெக்னெட்டேட்இன் மின்மவணு ((TcO4-), எஃகுக்கு எதிர்மின்ம மின்முனையில் (ஆனோடு, anode) ஏற்படும் அரிப்பைத்தடுக்கப் பயனபடுத்தப்படுகின்றது.
இத் தனிமம் கண்டுபிடிக்கும் முன்னமே, தனிம அட்டவணையில் 43 ஆவது தனிமத்தின் பண்புகள் பற்றி டிமிற்றி மெண்டெலீவ் கூறிய வருமுன்கூற்றுகள் சரியானவையாக இருந்தன. மெண்டலீவ் தனிம அட்டவணையில் அன்றிருந்த தனிமங்களுக்கு இடையே பெரும் இடைவெளி இருப்பதைக் கண்டு இதனை ""எக்காமாங்கனீசு" (ekamanganese) எனப் பெயர் சூட்டியிருந்தார்.
[தொகு] வெளி இணைப்புகள்
- தனிமங்கள் வலை -டெக்னீசியம்
- pubs.acs.org – நோட்டாக்-டேக் கண்டுபிடிப்பு பற்றி அமெரிக்க வேதியியல் குமுகத்தில் (ACS) - Noddack and Tacke's கண்டுபிடிப்பு