See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
ஜிமெயில் டிரைவ் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

ஜிமெயில் டிரைவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

ஜிமெயில் டிரைவ் அல்லது ஜிமெயில் ட்ரைவ் என்பது மைக்ரோசாப்ட் இன்டெர்நெட் எக்ஸ்புளோளர் உலாவியின் ஓர் இலவச நீட்சியாகும். இது ஜிமெயில் மின்னஞ்சல் உள்ள கணினிகளின் வலையமைப்பில் ஓர் பகிரப்பட்ட இடமொன்றை உருவாக்குகின்றது. கணினிகளின் தட்டுக்களில் செய்வதைப் போன்றே நகலெடுத்தல் ஒட்டுதல் போன்றவற்றைச் செய்ய இயலும்.

[தொகு] தொழிற்பாடுகள்

ஜிமெயில் ட்றைவ் அஞ்சற்பெட்டி ஜிமெயில் மின்னஞ்சலின் கணக்கினைப் பயன்ப்டுத்தி கோப்புகளைப் பாவிக்கும் முறையாகும். இம்முறை ஜிமெயிலைப் பாவிப்பதால் ஜிமெயிலிலுள்ள அதே கட்டுப்பாடுகள் இங்கும் உண்டு. ஜிமெயில் தனித்து இயங்கக்கூடிய கோப்புக்களையும் executable மற்றும் சுருக்கப் பட்ட கோப்புக்களையும் Zip எனும் கோப்புக்களின் கோப்பு நீட்சிப் பெயரை மாற்றி அமைப்பதன் மூலமோ RAR முறையிலோ 7ZIP கோப்புமுறையில் சுருக்கப்பட்ட கோப்புக்களோ சேமிக்க இயலும். மேலும் 20 மெகாபைட் இற்கு மேற்பட்ட கோப்புக்களை ஜிமெயில் அனுமதிக்காது என்பதால் அதை இங்கும் பயன்படுத்த முடியாது. அவ்வாறு 20 மேகாபைட்டிற்கும் மேற்பட்ட கோபுகளை தகவலேற்ற செய்ய வேண்டின், கோப்புகளை கோப்பு பிரிப்பான்(File Splitter) மூலம் சிறு சிறு பகுதிகளாக பிரித்துவிட்டு, அப்பகுதிகளை தகவலேற்றம் செய்யலாம்

ஜிமெயில் டிரைவ் ஓர் பயனர் கணக்கில ஒன்றிற்கு மேற்பட்ட கணினிகளிளூடாக இணைந்து கொள்ளும் வசதிகள் உள்ளது. இது பாதுகாப்புக் குறைவானது எனினும் பல பயனர் உள்ள கோப்பு வழங்கி அல்லது சேவரைப் போன்றும் தொழிற்படும்.

ஜிமெயில் ட்றைவ் தொழிற்படுவதற்கு பயனரின் கணினி இணையத்துடன் இணைக்கப்ட்டு ஜிமெயில் மின்னஞ்சலும் இருக்க வேண்டும். அகலக்கற்றை (broadband) இணைய இணைப்பு இருப்பதுதான் நடைமுறையில் சாத்தியமாகும். ஜிமெயில் டிரைவ் அவ்வப்பபோது மின்னஞ்சலைச் ஆய்வுசெய்து ஏதேனும் புதிய கோப்புக்கள் வந்துள்ளனவா என்று பார்த்து அதன் கோப்புறை அமைப்பை மீளமைத்துக் கொள்ளும்.

[தொகு] எச்சரிக்கை

ஜிமெயில் டிரைவின் இடவசதி. பயனரின் பெயரை டிரைவ் பெயராகக் காட்டுவதைப் பார்க்கலாம்
ஜிமெயில் டிரைவின் இடவசதி. பயனரின் பெயரை டிரைவ் பெயராகக் காட்டுவதைப் பார்க்கலாம்

ஜிமெயில் டிரைவ் ஓர் சோதனைப் மென்பொருளே. இது ஜிமெயிலின் பிரயோக நிரலாக்க இடைமுகத்தில் (API)-இலேயே தங்கியுள்ளது. ஜிமெயில் தமது பிரயோக நிரலாக்க இடைமுகத்தை மாற்றினால் இது செயலிழந்து போகலாம் எனினும் ஜிமெயில் ட்றைவும் ஜிமெயில் மாற்றங்கள் ஏற்றபட ஏற்பட அதற்கேற்ப மாற்றங்களைத் தொடர்ந்து செய்துள்ளதோடு இனியும் செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். தவிர அப்படியே மாற்றங்கள் செய்யமுடியாவிட்டாலும் கோப்புக்கள் அங்கேயேதான் மின்னஞ்சலில் இருக்கும் என்பதால் மீள்விப்பதில்(திரும்பப்ப்பெருவதில்) சிரமம் ஏதும் இருக்காது.

ஜிமெயில் டிரைவைப் பாவிப்பது ஜிமெயிலின் சேவை நிபந்தனைகளை மீறுவதாக அமையலாம்.

ஜிமெயில் ட்றைவ் கூகிளின் சேவை அன்று. இது மூன்றாம் தரப்பில் இருந்து பெறப்படும் சேவையாகும். எனவே ஜிமெயில் பயனர்கள் தமது ஜிமெயில் பற்றிய விபரங்களை மூன்றாம் தரப்பிற்கு பகிரப்படுகின்றது.

[தொகு] வெளியிணைப்புக்கள்

ஜிமெயில் டிரைவ் அதிகாரப்பூர்வத் தளம் (ஆங்கிலத்தில்)


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -