See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
பயனர் பேச்சு:செல்வா - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

பயனர் பேச்சு:செல்வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.



[தொகு] IAST க்கான என் பரிந்துரை

IAST க்கான என் பரிந்துரை

[தொகு] ontology

http://en.wikipedia.org/wiki/Ontology_(computer_science) - தமிழில் ? இருப்பியல்?--ரவி 14:53, 4 ஜூன் 2008 (UTC)

Ontology என்னும் சொல் சில மாறுபட்ட பொருள்களில் வழங்குவது. இதன் அடிப்படைப் பொருள் கிரேக்க மொழி வேரின் படி (ontos) "on being", nature and essence of existence; "ontology is the study of what actually is" என்பதாகும். எனவே தமிழில் எது உள்ளதென்று கூறுகிறோமோ அதுவே. உண்மை. ஆனால் உண்மை என்னும் சொல் உள்ளதன்மையை, உள்ளதைக் குறித்தாலும், அதுதான் ஆன்ட்டால'சி (ontology) என்றாலும், "truth" என்னும் சொற்களுடன் குழப்பம் தர வாய்ப்புள்ளது. எனவே உள்ளியம் எனலாம் (உள், உள்ளதன்மை +இயம்) . உள்ளியல் என்றும் கூறலாம். மெய்யியலிலும், கணினி கருத்தியலிலும், உயிரியல் போன்ற பிற பல துறைகளிலும் சற்றே வெவ்வேறுபட்ட பொருள்களில் இது ஆளப்படுகின்றது. பல இடங்களில் இதன் பொருள் அடிப்படைக் கூறுகள், அடிப்படை கூறுகளும் அதன் அடிப்படை உள்ளுறவுகளும் என்னும் பொருளில் ஆளப்படும். அதாவது ஒன்றைப் பற்றி அறிய அதன் அடிப்படைக் கட்டுமானப் பொருள்களைப் பற்றி அறிவதும், அவைகளுக்கிடையே உள்ள அடிப்படை உறவுக்கூறுகளை அறிவதும் ஒன்றைப் பற்றி புரிந்து கொள்ள உதவும் அல்லவா? இதனாலேயே, அடிப்படை சொற்களையும், அச்சொற்களின் பொருள்களையும் வரையறை செய்து ஓர் அறிவுப்புலத்தை வரையறை செய்யும் இயலை ஆன்ட்டால'சி என்கிறார்கள். ஒரு துறையின் அறிவை ஒழுங்குபட கருத்துகளாக பகுத்து, அவற்றின் அடிப்படையில் அத்துறையை (domain) அறிதல். எனவே உள்ளியியல், உள்ளியம், உள்ளடுக்கியல், உள்ளமைப்பியல், உள்ளொழுங்கியல் என்று பல இடங்களில் இடத்திற்கு ஏற்றவாறு பயன்படுத்தலாம். ஆன்ட்டால'சி என்பதன் உண்மையான அடிப்படைப் பொருள் உண்மையியல் என்பதுதான் !! எனவே உண்மையியல் என்றும் கூறலாம். இன்னும் நிறைய விரித்து எழுதலாம். இது பற்றி சுருக்கமாக வேண்டுமானால் ஒரு கட்டுரையே எழுதிவிடுவோம்.--செல்வா 16:00, 4 ஜூன் 2008 (UTC)

[தொகு] சீனம், மேற்கு, தமிழியம்

மேற்கின் மெய்யியலை systematic argumentation and theory என்று கூறுகின்றனர் [1]. சீன மெய்யிலை அனுபவ அறிவு என்று கூறுலாம். ("Chinese philosophy is "wisdom" literature, composed primarily of stories and sayings designed to move the audience to adopt a way of life or to confirm its adoption of that way of life.") இது பொதுமைப்படுத்தலே.

அப்படியானால், தமிழியம் அல்லது தமிழ் மெய்யிலை அவதானிப்புகள் - Observations என்று கூறலாமா. அனுபவத்திலிருந்து observations என்றாலும். அல்லது பரிந்துரைகள்தான் பெரிதும் கிடைக்கின்றனவா. தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள் போன்றவற்றை வைத்து ஒரு கருத்து கூற முடியுமா? அல்லது இத்தகைய பொதுமைப்படுத்தல் சாத்திமற்றதா?

தொல்காப்பியத்தை எடுத்துக்கொண்டால், அது மேற்கு வழிமுறையோடு கூடிதாலாக ஒத்திருப்பதாக சொல்லாமா?


உங்கள் கருத்துக்களை அறிய ஆவல்.நன்றி. --Natkeeran 20:05, 11 ஜூன் 2008 (UTC)

தமிழ் மெய்யியல் என்பது இன்னமும் உலக அறிஞர்கள் போதிய அளவு உணராதது. தமிழ் மெய்யியலும் இந்திய மெய்யியலும் (இதில் புத்தமதம், சமணமதம், வேதமதம், சிவனிய மதம், திருமாலியம், சாக்தம் என்னும் சத்தியியம் ஆகிய எல்லாமும் அடங்கும்) ஏறத்தாழ ஒன்றே. தமிழில் தொடர்பறா வாழ்மரபாக குறைந்தது 2500 ஆண்டுகளாக வருவது. தமிழர் மெய்யியலில் இரண்டை நினைவில் கொள்ளுதல் பொருந்தும்

  • எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
  • எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

தமிழ் மெய்யியல் மேற்கு உலக மெய்யியலை பெரிதும் ஒத்தது என்றாலும், தமிழர்களின் பார்வையும் ஆழமும் வேறானது. தமிழ் மெய்யியலிலும் அடிப்படை உள்ளுணர்வு (அனுபவம்) தான், ஆனால் அதில் dogmatism ஏதும் இல்லை, புற அறிவுக்கூறானது அல்ல (not pure intellectualism), உள்ளுள்ளது - உணர்த்தவரியது, ஆனால் அவரவர் உணர இயலுவது. தெக்கணாமூர்த்தி (தட்சிணாமூர்த்தி) சொல்லாமல் சொன்னார் என்பார்களே அப்படி நிகழ்வது என்று கூறலாம். இங்கு விரிக்க இயலாது நற்கீரன். --செல்வா 23:11, 11 ஜூன் 2008 (UTC)

கருத்துக்களுக்கு நன்றி. --Natkeeran 23:52, 11 ஜூன் 2008 (UTC)


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -