கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சங்க இலக்கியம் ஓர் எடுத்துக்காட்டு
யாதும் ஊரே, யாவரும் கேளிர்;
தீதும், நன்றும், பிறர் தர வாரா;
நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன;
சாதலும் புதுவது அன்றே! வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின்
இன்னாது என்றலும் இலமே! மின்னொடு
வானம் தண் துளி தலைஇ ஆனாது,
கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில்
பெரியோரை வியத்தலும் இலமே!
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!
-கணியன் பூங்குன்றனார்
(புறநானுறு - 192)
|
சங்க இலக்கியம் எனப்படுவது தமிழில் கிறிஸ்துக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்களை ஆகும்.சங்க இலக்கியம் 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களை கொண்டுள்ளது.இப்புலவர்களுல் பல தரப்பட்ட தொழில் நிலையுள்ளோர் மற்றும் பெண்களும் உண்டு. சங்க இலக்கியங்கள் அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் தினசரி வாழ்க்கை நிலைமைகளை படம்பிடித்து காட்டுவதாய் உள்ளது.பண்டைத்தமிழரது காதல்,போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடப்புகளை சங்க இலக்கியப்பாடல்கள் எமக்கு அறியதருகின்றன்.
19 ம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களானசி. வை. தாமோதரம்பிள்ளை, உ. வே. சாமிநாதையர் ஆகியோரது முயற்சியினால் சங்க இலக்கியங்கள் அச்சுரு பெற்றது.
சங்க இலக்கியங்களை எட்டுத்தொகை நூல்கள்,பத்துப்பாட்டு நூல்கள்,பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என பெரும்பிரிவாக தொகுத்தடக்கப்பட்டுள்ளது.
[தொகு] எட்டுத்தொகை நூல்கள்
[தொகு] பத்துப்பாட்டு நூல்கள்
[தொகு] பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
[தொகு] வெளி இணைப்புக்கள்