கொழும்பு பல்கலைக்கழகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இலங்கையில் கொழும்புப் பல்கலைக் கழகமே மிகப் பழமையான பல்கலைக் கழகம் ஆகும். இது ஆரம்பத்தில் இலண்டன் பல்கலைக் கழகத்துடன் இணைந்து ஓர் பல்கலைக் கழகக் கல்லூரியாக இருந்து பின்னர் பல்கலைக் கழகமாக மாறியது. இது குதிரைப்பந்தயத் திடலையையும் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அவர்களின் ஆட்சியில் உள்வாங்கிக் கொண்டதால் சிங்கள மொழியில் அஸ்வவித்தியாலய என்று பகிடியாகவும் அழைக்கப் படுகின்றது.