See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
கொழும்புச் செட்டி - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

கொழும்புச் செட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

கொழும்புச் செட்டி என்பது இலங்கையில் வாழும் சிறு தொகையினரான ஒரு சமுதாயத்தினரைக் குறிக்கும். இவர்கள் தற்போது பெரும்பாலும் கத்தோலிக்க மதத்தையே பின்பற்றி வருகிறார்கள். இலங்கையில் பல்வேறு துறைகளிலும் இவர்களைக் காண முடியும்.

[தொகு] தோற்றம்

இவர்கள் பல்வேறு இனங்களையும் சேர்ந்த தென்னிந்திய வணிகர்களின் வழித் தோன்றல்கள் ஆவர். இவர்களுடைய மூதாதையர் பெரும்பாலும் தமிழர்கள். குறைந்த அளவில் மலையாள, தெலுங்கு இனத்தவர்களின் வழி வந்தவர்களும் உள்ளனர். தென்னிந்திய வணிகர்கள் ஏறத்தாழ இலங்கையின் வரலாற்றுக் காலம் முழுவதுமே இந்நாட்டோடு தொடர்பு கொண்டுள்ளார்கள். எனினும், கொழும்புச் செட்டிகளின் மூதாதையர்கள், கி.பி 1505 ஆம் ஆண்டுக்குப் பின், இலங்கையில் போத்துக்கீசர் ஆட்சி நிலவிய காலத்தில் இங்கே வந்தவர்களாவர். இவர்கள் போத்துக்கீசரின் சமயமான கத்தோலிக்க சமயத்துக்கு மாறி இலங்கையில் தங்களை நிலை நிறுத்திக் கொண்டனர். இவர்கள் தங்கள் சமுதாயத்துக்குள் மட்டுமன்றி, இலங்கைத் தமிழர், சிங்களவர், போத்துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர், ஐரோப்பிய ஆசியக் கலப்பினத்தவர் போன்ற பலருடனும் மணத்தொடர்புகளைக் கொண்டிருந்தனர்.

[தொகு] தனித்துவ அடையாளம்

சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை, கொழும்புச் செட்டிகளில் பலர் தமிழைப் பயின்று வந்ததுடன், அவர்கள் தமிழ்ச் சாதிகளுள் ஒன்றைச் சேர்ந்தவராகவே கருதப்பட்டு வந்தனர். எனினும், ஆங்கிலக் கல்வியும், தமிழர் தவிர்ந்த சிங்களவர் உட்பட்ட ஏனைய இனமக்களுடனும் இனக் கலப்புற்றதனாலும், இவர்கள் படிப்படியாகத் தமிழைக் கைவிட்டுவிட்டனர். இவர்கள் பொரும்பாலும் ஆங்கிலத்தையே வீட்டு மொழியாகக் கொண்டுள்ளதுடன், சிங்களத்தையும் பயன்படுத்தி வருகிறார்கள். இவர்கள் இன்று தமிழராகவோ சிங்களவராகவோ கணிக்கப்படாமல் ஒரு தனி இனமாகவே கொள்ளப்படுகின்றார்கள். இவர்கள் பல இனத்தவரிடையேயும் கலந்து மணம் புரிந்ததன் காரணமாகச் சில சந்தர்ப்பங்களில் இவர்களுக்கும், பறங்கிச் சமூகத்தவருக்கும் இடையே துல்லியமான வேறுபாடுகளைக் காண முடியாத நிலையும் உள்ளது.

எடுத்துக்காட்டாகப் பறங்கியராகக் கருதப்படும் இலங்கையின் பிரபல ஆங்கில எழுத்தாளரான மைக்கேல் ஒந்தாச்சி என்பவர் கொழும்புச் செட்டிகளுடன் தாராளமான மண உறவுகளைக் கொண்டிருந்த இந்துத் தென்னிந்திய வைத்தியர் ஒருவரின் வழி வந்தவர் என அறியப்படுகின்றது.

ஆரம்ப காலங்களில் குடியேற்றவாத ஆட்சிகளின் கீழ் சிவில் சேவைகளில் அமர்ந்த தமிழர்களில் பலர் கொழும்புச் செட்டிகளாக இருந்தனர். பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில், அரச சேவையில் உயர் பதவிகளை வகித்ததுடன், ஒரு சிறந்த தமிழ் அறிஞராகவும் விளங்கி, தமிழ்ப் புலவர்கள் பற்றியும், இலங்கையில் தமிழர்களின் வரலாறு தொடர்பிலும் பல நூல்களை எழுதி வெளியிட்ட சைமன் காசிச்செட்டி என்பவர் கொழும்புச் செட்டி சமூகத்தைச் சேர்ந்தவராவார்.

[தொகு] புகழ்பெற்ற கொழும்புச் செட்டிகள் சிலர்

ஏனைய மொழிகள்


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -