Web - Amazon

We provide Linux to the World

ON AMAZON:


We support WINRAR [What is this] - [Download .exe file(s) for Windows]

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
SITEMAP
Audiobooks by Valerio Di Stefano: Single Download - Complete Download [TAR] [WIM] [ZIP] [RAR] - Alphabetical Download  [TAR] [WIM] [ZIP] [RAR] - Download Instructions

Make a donation: IBAN: IT36M0708677020000000008016 - BIC/SWIFT:  ICRAITRRU60 - VALERIO DI STEFANO or
Privacy Policy Cookie Policy Terms and Conditions
கிளிமஞ்சாரோ மலை - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

கிளிமஞ்சாரோ மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

கிளிமஞ்சாரோ மலை

கிளிமஞ்சாரோவில் கிபோ முகட்டின் உச்சி
உயரம் 5,895 மீட்டர்கள் (19,340 அடி)
அமைவிடம் டான்சானியா
தொடர் தொடரல்ல. தனிமலை
சிறப்பு 5,895 மீ தனிமலை உயரத்தில் முதன்மை
ஆள்கூறுகள் 03°04′33″S 37°21′12″E / -3.07583, 37.35333அமைவு: 03°04′33″S 37°21′12″E / -3.07583, 37.35333
கடைசி வெடிப்பு பதிவான வரலாற்றில் இல்லை
முதல் ஏற்றம் அக்டோபர் 6, 1889 யோகானஸ் கின்யாலா லௌவோ (Yohanas Kinyala Lauwo), ஹான்ஸ் மேயர் (Hans Meyer), லூடுவிக் புர்ட்ஷெல்லர் ( Ludwig Purtscheller)
சுலப வழி மலைவழி நடத்தல் (மலைநடை)

கிளிமஞ்சாரோ மலை டான்சானியா நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மிக உயரமான எரிமலை வகையைச் சேர்ந்த மலை. இதுவே ஆப்பிரிக்காக் கண்டத்தில் உள்ள மலைகள் யாவற்றினும் மிக உயர்ந்த மலை. இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 5895 மீட்டர் (19,340 அடி) ஆகும். இம்மலையின் மிக உயரமான முகட்டுக்கு 'உகுரு' [1] என்று பெயர். கிளிமஞ்சாரோ மலையில் கிபோ, மாவென்சி, சிரா ( Kibo, Mawensi, Shira) என மூன்று எரிமலை முகடுகள் உள்ளன. இம்மலை, பல உள்ளடுக்கு கொண்ட எரிமலை வகையைச் சேர்ந்த எரிமலை (பல்லுள்ளடுக்கு எரிமலை, stratovolcano). கிளிமஞ்சாரோ எந்தவொரு மலைத்தொடரையும் சாராத தனிமலை. இமயமலைத் தொடர்களில் உள்ள மலைகளை ஒப்பிடும் பொழுது கிளிமஞ்சாரோவின் உயரம் அதிகம் இல்லை. ஆனால் கிளிமஞ்சாரோதான் உலகில் உள்ள தனிமலைகள் யாவற்றினும் மிக உயரமான மலை ஆகும்.

பொருளடக்கம்

[தொகு] மலை அமைப்பு

இம்மலையில் மிக உயரமான முகட்டு உச்சியாகிய உகுரு கிபோ எரிமலையில் உள்ளது. கிபோ மலையின் உச்சியில் காணப்படும் எரிமலைக் குழி 2.4 கி.மீ (1.5 மைல்) விட்டம் உடையது. உகுரு முகடு ஆப்பிரிக்காவிலேயே உயரமான இடமாகையால், உலகின் ஏழு கொடுமுடிகள் (seven summits) என்று கருதப்படும் உயரான முகடுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. கிளிமஞ்சாரோவின் உகரு முகட்டிற்கு முதன்முதலாக அக்டோபர் 6, 1889 அன்று, மராங்கு (Marangu ) படைத்துறையைச் சேர்ந்த யோகானஸ் கின்யாலா லௌவோ (Yohanas Kinyala Lauwo) என்பவரின் துணையோடு டாய்ட்ச் நாட்டைச் சேர்ந்த ஹான்ஸ் மேயர் (Hans Meyer), ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த லூடுவிக் புர்ட்ஷெல்லர் ( Ludwig Purtscheller) ஆக மூவரும் ஏறி வரலாறு படைத்தனர். கிபோவைத் தவிர மற்ற இரு பெரும் எரிமலை முகடுகளாகிய மாவென்சி ((5,149 மீ, 16,890 அடி), சிரா (3,962 மீ, 13,000 அடி) ஆகியனவும் அடங்கிவிட்ட எரிமலைகள்தாம். மாவென்சி ஆப்பிரிக்காவிலேயே மூன்றாவது உயரமான மலை (கென்யா மலை இரண்டாவது உயரமான மலை).

[தொகு] மலையின் பெயர்

வெண்பனி மூடிய கிபோ மலை உச்சி. வானில் இருந்து எடுத்த படம்
வெண்பனி மூடிய கிபோ மலை உச்சி. வானில் இருந்து எடுத்த படம்

இம்மலைக்குக் கிளிமஞ்சாரோ என்னும் பெயர் எப்பொழுது யாரால் வழங்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் ஐரோபியர் இப்பெயரை 1860 ஆம் ஆண்டளவில் பயன்படுத்தத் தொடங்கினார்கள். சுவாகிலி மொழியில் "கிளிமா" (Kilima ) என்றால் குன்று (சிறுமலை) என்று பொருள்[2] என்றும் "ஞ்சாரோ" (Njaro) என்றால் பழைய சுவாகிலி மொழியில் வெள்ளை" "பளபளப்பான" என்று பொருள் என்றும் [3] கூறுகின்றனர். ஆனால் வேறு சிலர் இது சுவாகிலி மொழிச்சொல் அல்ல என்றும், கிச்சகா மொழியில் ஜாரோ (jaro) என்றால் பயணம் செல்லும் தொடர் (caravan) என்றும் பல்வேறு விதமாகக் கூறுகின்றனர். சிறுமலை அல்லது குன்று என்று பொருள்படும் கிளிமா என்னும் பெயர் எப்படி இப்பெரிய மலைக்கு முன்னொட்டாக வந்தது என்று இவ்விளக்கங்கள் தெளிவு படுத்துவதில்லை. கிச்சகா மொழியில் கிளிமஞ்சாரே அல்லது கிளிமஜ்யாரோ (kilemanjaare or kilemajyaro) என்னும் சொற்கள் "பறவையை, சிறுத்தையை, பயணத்தொடர் வரிசையைத் தோற்கடிக்கும்" ("which defeats the bird/leopard/caravan") என்று பொருள்படும் என்கிறார்கள், ஆனால் ஐரோப்பியர்கள் 1850களில் இங்கு வரும் முன்னர், கிச்சகா மொழியினர் அப்பெயரைப் பயன்படுத்தவில்லை என்றும் கூறுகிறார்கள்[2]

1880களில் இம்மலை டாய்ட்ச் மொழியில் கிலிமண்ட்ஷாரோ (Kilimandscharo) என்று அழைக்கப்பட்டது. கார்ல் பீட்டர்ஸ் என்னும் டாய்ட்ச் நாட்டவர் இப்பகுதி மக்களின் தலைவர்களிடம் பேசி இம்மலையை டாய்ட்ச் நாட்டினரின் கிழக்கு ஆப்பிரிக்கக் குடியாட்சியின் (காலனியின்) பகுதியாக ஆவதற்கு ஒப்புக்கொள்ளச் செய்தார். 1889இல் கிபோ மலையில் உள்ள உகுரு முகட்டை கெய்சர் வில்ஹெல்ம் ஸ்பிட்ஸெ (Kaiser-Wilhelm-Spitze) [2] என்று பெயரிட்டு டாய்ட்ச் பேரரசின் ஆவணங்களில் 1918 ஆம் ஆண்டுவரை பயன்படுத்தி வந்தனர். 1918 இல் பிரித்தானியர் இப்பகுதியை டாய்ட்ச்சு நாட்டினரிடம் இருந்து வென்று கைமாறிய பின் அப்பெயர் கைவிடப்பட்டது.


Mount Kilimanjaro - with Landsat Overlay. Heights two times exaggerated.
Mount Kilimanjaro - with Landsat Overlay. Heights two times exaggerated.

[தொகு] மலையேறும் பாதைகள்

Forest along the Marangu climbing route.
Forest along the Marangu climbing route.
Tanzania's Deputy Minister for Foreign Affairs with a guide at the summit.
Tanzania's Deputy Minister for Foreign Affairs with a guide at the summit.

கிளிமஞ்சாரோ மலைமீது ஏற ஏற்புபெற்ற பல மலைவழிகள் உள்ளன. அவையாவன: There are several routes officially sanctioned for climbing Kilimanjaro. These are:

  • மக்காமே (Machame) [4] [5]
  • மாரங்கு (Marangu) [6] [7]
  • ரோங்கை (Rongai) [8] [9]
  • லெமோஷோ அல்லது லண்டோரோசி லெமோஷோ (Londorossi Lemosho)[10] [11]
  • உம்புவே (Umbwe )[12] [13]
  • சிரா (Shira) [14] [15]
  • இம்வேக்கா (Mweka) (descent only) [16]

[தொகு] மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

  1. "உகுரு" என்பது Uhuru என்று கிழக்கு ஆப்பிரிக்க மொழியாகிய கிஸ்வாலி மொழியில் உள்ள சொல். அதன் பொருள் விடுதலை அல்லது நாட்டு விடுதலை என்று பொருள். தற்பொழுது ஆங்கிலத்திலும் இச்சொல் ஏற்றுக்கொண்ட சொல் (1950களில் ஏற்றுக்கொண்ட சொல்). இங்கே பார்க்கவும்)
  2. 2.0 2.1 2.2 http://www.ntz.info/gen/b00769.html
  3. "Kilima-Njaro" (alternate name in 1907), The Nuttall Encyclopædia, 1907, FromOldBooks.com, 2006, webpage: FOB-Njaro.
  4. http://7summits.com/kilimanjaro/machame.php
  5. http://www.climber.org/TripReports/2004/1390.html
  6. http://7summits.com/kilimanjaro/marangu.php
  7. http://www.ultimatekilimanjaro.com/routes#marangu
  8. http://7summits.com/kilimanjaro/rongai.php
  9. http://www.ultimatekilimanjaro.com/routes#rongai
  10. http://7summits.com/kilimanjaro/shira-machame.php
  11. http://www.ultimatekilimanjaro.com/routes#lemosho
  12. http://7summits.com/kilimanjaro/umbwe-breach.php
  13. http://www.ultimatekilimanjaro.com/routes#umbwe
  14. http://www.footprint-adventures.co.uk/itinkms.html
  15. http://www.ultimatekilimanjaro.com/routes#shira
  16. http://gorp.away.com/gorp/location/africa/tanzania/hik_kil2.htm


Static Wikipedia 2008 (March - no images)

aa - ab - als - am - an - ang - ar - arc - as - bar - bat_smg - bi - bug - bxr - cho - co - cr - csb - cv - cy - eo - es - et - eu - fa - ff - fi - fiu_vro - fj - fo - frp - fur - fy - ga - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - jbo - jv - ka - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - ms - mt - mus - my - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nn - -

Static Wikipedia 2007 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -
https://www.classicistranieri.it - https://www.ebooksgratis.com - https://www.gutenbergaustralia.com - https://www.englishwikipedia.com - https://www.wikipediazim.com - https://www.wikisourcezim.com - https://www.projectgutenberg.net - https://www.projectgutenberg.es - https://www.radioascolto.com - https://www.debitoformativo.it - https://www.wikipediaforschools.org - https://www.projectgutenbergzim.com