கிறிஸ்துமஸ் கெரொல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கிறிஸ்துமஸ் கெரொல் என்பது கிறிஸ்துமஸ் பண்டிகையை அல்லது குளிர் காலத்தை மையக்கருவாகக் கொண்ட பாடல்/தேவார வகையாகும். கெரொல் சாதாரணமாக கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக பாடப்படுவது வழக்கமாகும். கெரோல் இசையின் வரலாறு கிபி 13வது நூற்றாண்டில் ஆரம்பமானதாகும். ஆனால் மிக காலத்துக்குப் பிறகே கெரொல் கிறிஸ்தவ தேவலயங்களில் இடம்பெறவும் கிறிஸ்துமஸ் பண்டிகையுடன் தொடர்பு படவும் தொடங்கியது. பாரம்பரிய கெரொல் இசைகள் மத்தியக் கால ஐரோப்பிய இசையைக் கொண்டிருப்பதால் மற்ற இசை வகைகளில் இருந்து வேறுபடுத்துவது இலகுவாகும். இது சாதாரணமாக ஒரு தலைமை பாடகருக்கு கீழான குழுப்பாடகர்களால் இசைக்கப்படும். கிறிஸ்தவ மத சீறமைப்பின் பின்னர் கெரொல் இசையின் புகழ் குன்றினாலும் 19 ஆம் நூற்றாண்டில் அதன் முக்கியத்துவம் அதிகரித்தது.