உனக்கு ஒரு நீதி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
உனக்கு ஒரு நீதி | |
இயக்குனர் | கே. எஸ். பாலச்சந்திரன் |
---|---|
தயாரிப்பாளர் | கே.எஸ்.பாலச்சந்திரன் |
நடிப்பு | கிங்ஸ்லி செபஸ்தியாம்பிள்ளை தர்ஷினி வரப்பிரகாசம் அமல்குமார் |
ஒளிப்பதிவு | இந்திரசித்து |
படத்தொகுப்பு | இந்திரசித்து |
வெளியீடு | 2003 |
நாடு | கனடா |
மொழி | தமிழ் |
உனக்கு ஒரு நீதி 2003ல் தயாரிக்கப்பட்ட குறுந்திரைப்படம். வசனங்கள் எதுவுமின்றி வெறும் இசையின் பின்னணியில் கதை நகர்த்திச் செல்லப்படும் இக்குறுந்திரைப்படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம் ஆகிய பொறுப்புகளை கே. எஸ். பாலச்சந்திரன் கவனித்துள்ளார்.
எஸ்.வீ. வர்மன் இதற்கான இசை அமைத்து, 2004ம் ஆண்டில் கனடாவில் நடந்த தமிழ்த் திரைப்படவிழாவில் சிறந்த இசை அமைப்பாளருக்கான விருதைப் பெற்றார்.
கிங்ஸ்லி செபஸ்தியாம்பிள்ளை, தர்ஷினி வரப்பிரகாசம், அமல்குமார் நடித்த இக்குறுந்திரைப்படத்தின் படப்பிடிப்பு, படத்தொகுப்பு ஆகியவற்றை இந்திரசித்து செய்தார்.