See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
இந்தியாவின் பொருளாதாரம் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

இந்தியாவின் பொருளாதாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

இந்தியாவின் பொருளாதாரம் கொள்வனவு சக்தி வேற்றுமை(PPP) அடிப்படையில் 3.363 டிரிலியன் டாலர் என்ற அளவில் உலகில் நான்காவது இடத்தில் இருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) வளர்ச்சி விகிதமானது 6.2 என்ற அளவில் இருக்கின்றது. எனினும் இந்திய மக்கள்தொகை மிக அதிகமாக இருப்பதால் தனி நபர் வருவாய் 3100 டாலர் என்ற குறைந்த அளவிலேயே இருக்கிறது.

இந்தியப்பொருளாதாரமானது விவசாயம், கைவினைப்பொருட்கள், தொழில்துறை, மற்றும் சேவைத்துறை போன்ற பலவற்றைச் சார்ந்துள்ளது. சேவைத்துறையே இந்தியாவின் தற்போதைய பொருளாதார வளர்ச்சிக்கு காரணமாக உள்ளது. இந்தியாவின் மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கானது நேரடியாகவோ மறைமுகமாகவோ விவசாயத்தையே சார்ந்துள்ளது.

பொருளடக்கம்

[தொகு] வரலாறு

இந்தியாவின் பொருளாதார வரலாறானது மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கப்படலாம். அவையாவன: காலனி ஆதிக்கத்திற்கு முந்தைய காலகட்டம்(இது 17-ஆம் நூற்றாண்டு வரை), காலனி ஆதிக்க காலகட்டம்(17-ஆம் நூற்றாண்டு முதல் 1947 வரை), மற்றும் சுதந்திரத்திற்கு பிந்தைய காலகட்டம்(1947 முதல் தற்போது வரை).

இந்தியப் பொருளாதாரம்
பணம் Indian Rupee (INR) (₨) = 100 Paise
நிதி ஆண்டு April 1இருந்துMarch 31
வர்த்தக அங்கத்தினர் SAFTA, WTO
Statistics
GDP படிநிலை 4th
GDP $3.611 trillion (2005 est.)
GDP வளர்ச்சி 9.2% (Q2 2006-07) [1]
GDP தனிமனிதனுக்கு $3,300 (2005 est.)
GDP துறைவாரியாக agriculture: 18.6%, industry: 27.6%, services: 53.8% (2005 est.)
பணவீக்கம் 4.2% (2005 est.)
வறுமைக் கோடுகீழானவர்கள் 25% (2002 est.)
ஊழியர் படை 496.4 million (2005 est.)
தொழில் வாரியாக ஊழியர் படை agriculture: 60%, industry: 17%, services: 23% (1999)
வேலையின்மை வீதம் 8.9% (2005 est.)
முக்கிய தொழிற்துறை textiles, chemicals, food processing, steel, transportation equipment, cement, mining, petroleum, machinery, software|- வர்த்தகப் பங்காளர்கள்
ஏற்றுமதி $76.23 billion f.o.b. (2005 est.)
ஏற்றுமதி பண்டங்கள் textile goods, gems and jewelry, engineering goods, chemicals, leather manufactures
இறக்குமதி நாடுகள் US 18%, China 8.9%, UAE 8.4%, UK 4.7%, Hong Kong 4.2% (2005)
இறக்குமதி $113.1 billion f.o.b. (2005 est.)
இறக்குமதிப் பண்டங்கள் crude oil, machinery, gems, fertilizer, chemicals
ஏற்றுமதி நாடுகள் China 7.2%, US 6.4%, Belgium 5.1%, Singapore 4.7%, Australia 4.2%, Germany 4.2%, UK 4.1% (2005)
பொது நிதிகள்
Public debt $125.5 billion (2005 est.)
வருமானம் $111.2 billion
செலவீனம் $135.8 billion; including capital expenditures of $15 billion (2005 est.)
பொருளாதார உதவிகள் recipient: $2.9 billion (FY98/99)

[தொகு] அரசாங்கத்தின் பங்கு

[தொகு] திட்டமிடல்

இந்திய அரசு சுதந்திரததிற்குப்பிறகு பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதறகாக ஐந்தாண்டுத்திட்டங்களைத் தீட்டியது. இது திட்டக்குழுவினால் செயல்படுத்தப்படுகிறது. பிரதமரே திட்டக்குழுவின் தலைவராவார்.

[தொகு] நாணய முறை

இந்தியாவில் பயன்படுத்தப்படும் நாணயத்தின் பெயர் ரூபாய் ஆகும். நூறு பைசாக்கள் கொண்டது ஒரு ரூபாய் ஆகும்.

[தொகு] காரணிகள்

[தொகு] மக்கள்தொகைப்பரம்பல்

இந்தியாவின் மக்கள்தொகை 102.7 கோடியாகும். இது உலகிலேயே இரண்டாவது மக்கள்தொகை மிகுந்த நாடாகும். உலகின் மக்கள்தொகையில் 17 சதவீதத்தை இந்தியா கொண்டுள்ளது.

[தொகு] புவியியலும் இயற்கைவளங்களும்

இந்தியா பலவேறுபட்ட நிலப்பரப்புகளைக்கொண்டுள்ளது. மலைத்தொடர்கள் முதல் பாலைவனம் வரை இந்தியாவில் உள்ளன. வெப்பநிலை மிகக்குளிர் முதல் கடும் வெப்பம் வரை நிலவுகிறது. இந்தியா ஆண்டுக்கு சராசரியாக 1100 மி.மீ. மழையைப் பெறுகிறது. பாசனத்திற்காக 92% நீரானது பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் பலவகையான தாதுக்கள் கிடைக்கின்றன. நிலக்கரி அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. மேலும் இரும்புத்தாது, மைக்கா, மாங்கனீசு, டைட்டானியம், தோரியம், வைரம், இயற்கை எரிவாயு, பெட்ரோலியம் போன்றவையும் கிடைக்கின்றன.

[தொகு] உள்கட்டமைப்பு

[தொகு] அரசியல்

[தொகு] துறைகள்

[தொகு] விவசாயம்

1999- 2000 - ஆம் ஆண்டு கணக்கின் படி இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25% விவசாயம் மற்றும் அதனுடன் இணைந்த துறைகளான காடு வளர்த்தல், மரம் வெட்டுதல், மீன் பிடித்தல் போன்றவற்றின் மூலமே பெறப்பட்டது. மேலும் வேலைவாய்ப்பில் 57 சதவீதத்தினை இத்துறையே வழங்கியது. பசுமைப்புரட்சியின் விளைவாக கடந்த 50 ஆண்டுகளில் உற்பத்தித்திறன் நன்கு அதிகரித்துள்ளது. எனினும் உலகத்தரத்துடன் ஒப்பிடும்போது இது 30 லிருந்து 50 சதவீதம் வரை குறைவாகவே உள்ளது. கல்வியறிவின்மை, சீரற்ற பருவமழை, குறுநிலங்கள், போதிய நீர்ப்பாசன வசதி இல்லாமை போன்றவை இதற்கு காரணங்களாக விளங்குகின்றன.

[தொகு] தொழில்துறை

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்திய தொழில்துறையின் பங்கு 28.4 சதவீதமாகும். 17 சதவீதம் பேருக்கு இது வேலைவாய்ப்பளிக்கிறது. 1991-ல் ஏற்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்குப்பிறகு பல பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்குகின்றன.

[தொகு] சேவைத்துறை

சேவைத்துறையானது தற்போது வேகமாக வளர்ந்து வரும் துறையாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இதன் பங்கு 1950-ல் 15%-லிருந்து தற்போது 2000-ல் 48 சதவீதமாக அதிகரித்துள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறையில் இந்தியா முன்னணி வகிக்கிறது.

[தொகு] நிதி மற்றும் வங்கித்துறை

[தொகு] சமூக-பொருளாதார விளைவுகள்

[தொகு] வெளிநாட்டு வணிகமும் முதலீடும்

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

[தொகு] குறிப்புகள்

[தொகு] வெளி இணைப்புகள்


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -