இடும்பி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இடும்பி மகாபாரதக் கதையில் வருபவள். இடும்பனின் உடன்பிறந்தவள். காட்டுவாசியான இவள் வீமனை விரும்பினாள். வீமனுக்கும் இடும்பிக்கும் பிறந்தவனே கடோத்கஜன்.
பாண்டவர்களின் வனவாச காலத்தில் இடும்பன் இடும்பியைப் பாண்டவர்களைக் கொன்று இறைச்சியாக்கி வருமாறு அனுப்புகிறான். பாண்டவர்களில் ஒருவனான வீமனைக் கண்டு இடும்பி அவனை விரும்புகிறாள். ஓர் அழகியான பெண்ணாக மாறி வீமனை அணுகுகிறாள். நீண்ட நேரம் இடும்பி திரும்பி வராததால் இடும்பன் வீமனைக் கொல்ல வருகிறான். வீமனுக்கும் இடும்பனுக்கும் நடந்த சண்டையில் இடும்பன் கொல்லப்படுகிறான். பின்னர் இடும்பி வீமனைத் திருமணம் செய்கிறாள். இவர்களுக்குக் கடோத்கஜன் பிறக்கிறான். வனவாசத்தின் பின்னர் இடும்பியும் வீமனும் மீண்டும் சந்தித்தார்களா என்பது பற்றித் தெரியவில்லை.
ஹிமாச்சல் பிரதேசத்தின் சில பகுதிகளில் இடும்பியை வழிபடுவோர் உள்ளனர்.
வியாசரின் மகாபாரதம் | |
---|---|
கதை மாந்தர் | |
குரு வம்சம் | மற்றவர்கள் |
சாந்தனு | கங்கை | பீஷ்மர் | சத்யவதி | சித்ராங்கதன் | விசித்திரவீரியன் | அம்பிகா | அம்பாலிகா | விதுரன் | திருதராஷ்டிரன் | காந்தாரி | சகுனி | சுபத்ரா | பாண்டு | குந்தி | மாத்ரி | தருமர் | பீமன் | அர்ஜுனன் | நகுலன் | சகாதேவன் | துரியோதனன் | துச்சாதனன் | யுயுத்சு | துச்சலை | திரௌபதி | இடும்பி | கடோற்கஜன் | அகிலாவதி | உத்தரை | உலுப்பி | சித்திராங்கதா | அம்பா | பார்பரிகா | பாப்புருவாகனன் |அரவான் | அபிமன்யு | பரீட்சித்து | விராடன் | கிருபர் | துரோணர் | அசுவத்தாமன் | ஏகலைவன் | கிரிதவர்மன் | ஜராசந்தன் | சாத்யகி | மயாசுரன் | துர்வாசர் | சஞ்சயன் | ஜனமேஜயன் | வியாசர் | கர்ணன் | ஜயத்திரதன் | கிருஷ்ணர் | பலராமர் | துருபதன் | இடும்பன் | திருஷ்டத்யும்னன் | சால்யன் | அதிரதன் | சிகண்டி |
மற்றயவை | |
பாண்டவர் | கௌரவர் | அஸ்தினாபுரம் | இந்திரப்பிரஸ்தம் | குருச்சேத்திரப் போர் | பகவத் கீதை |