இசைச் சொற்பொழிவு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சங்கீத கதாப்பிரசங்கம் என்ற வடமொழிச் சொற்றொடரால் பரவலாக அறியப்படும் இசைச் சொற்பொழிவு, பெரும்பாலும் இந்து சமயக் கதைகளையும் கருத்துக்களையும் மக்களிடையே பரப்புவதற்கான ஒர் ஊடகமாகப் பயன்பட்டு வருகிறது. இது, சமயம் சார்ந்த புராணங்களையும், கருத்துக்களையும் இடையிடையே பாடப்படும் இசைப் பாடல்களின் துணையோடு மக்களுக்குச் சுவைபட எடுத்துக்கூறும் ஒரு கலையாகும்.