ஆன்டன் வான் லீவன்ஹூக்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆன்டன் வான் லீவன்ஹூக் ( Anton van Leeuwenhoek, 1632-1723), டென்மார்க் நாட்டைச் சேர்ந்த இயற்கை வரலாற்று ஆய்வாளரும் நுண் நோக்கும் கருவிகளை உருவாக்கியவரும் ஆவார்.அவர், 247க்கும் மேற்பட்ட நுண் நோக்கும் கருவிகளை உருவாக்கினார்; அவற்றுள் சில, 270 மடங்குக்கும் அதிகமாக உருப்பெருக்கம் செய்யும் திறன் பெற்று இருந்தன. பாக்டீரியாக்கள், ப்ரோடோசோவாக்கள், ஸ்பெர்மடோசோவாக்கள் மற்றும் striped muscle பற்றிய முதல் முழு விவரிப்பைத் தந்தவரும் இவரே. இரத்த நாள ஓட்டம் பற்றிய விவரிப்பில், இரத்தச் சிவப்பு அணுக்களைப் பற்றியும் பதிவு செய்துள்ளார்.