ஆனைமுடி (மலை)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆனைமுடி | |
---|---|
இரவிக்குளம் தேசியப் பூங்காவில் இருந்து ஆனை முடியின் தோற்றம். |
|
உயரம் | 2,695 மீ. (8,842 அடி) |
அமைவிடம் | கேரளா, இந்தியா, மேற்குத் தொடர்ச்சி மலை |
தொடர் | மேற்குத் தொடர்ச்சி மலை |
சிறப்பு | 2, 695மீ தென் இந்தியாவில் மிகவும் உயரமான மலைச்சிகரம் |
ஆள்கூறுகள் | |
முதல் ஏற்றம் | தெரியவில்லை |
ஆனமுடி (தமிழ்நாட்டில் ஆனைமுடி) என்னும் மலை முகடு தான் தென் இந்தியாவிலேயே மிகவும் உயரமான இடம். இதன் உயரம் 2, 695 மீ (8, 842 அடி). இது தென் இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள இடம். இம்மலை முகடு இரவிக்குளம் தேசிய பூங்காவின் தென் பகுதியிலே ஏலக்காய் மலைகள், ஆனை மலைகள், பழனி மலைகள் கூடுமிடத்தில் உள்ளது. இந்த ஆனைமுடி மலை கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. மலை முகடு முன்னார் (மூனார்) நகராட்சியின் கீழ் உள்ளது.