அவளிவணல்லூர் சாட்சிநாதர் கோயில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அவளிவணல்லூர் சாட்சிநாதர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் அந்தணரின் மூத்த மகளுக்கு அம்மை போட்டு உருவம் மாறியதால் கணவன் இளையவளே என் மனைவி என்று கூறிய போது இறைவன் தோன்றி அருள் புரிந்தார் என்பது தொன்நம்பிக்கை.
தஞ்சாவூர்-நாகூர் இருப்புப் பாதையில் சாலிய மங்கலம் தொடர்வண்டி நிலையத்திலிருந்து வடகிழக்கே ஆறைரை மைல் தொலைவில் உள்ள திருத்தலமிது. கோயில் வெண்ணி இருப்புப்பாதை நிலையத்திலிருந்தும் செல்லலாம்.
இங்கு எழுந்தருளிய சிவபிரானுக்குத் தம்பரிசுடையார், சாட்சிநாதர் என்றும் இறைவிக்குச் செளந்தரியவல்லி என்றும் பேர். தீர்த்தம் சந்திரபுட்கரணி. தலவிருட்சம் பாதிரி.
[தொகு] தொன்நம்பிக்கைகள்
வராகமூர்த்தியும் காசியப்பமுனிவரும் வழிபட்டுப் பேறு பெற்ற தலம். தன்மனைவியை விடுத்து அவள் தங்கையைத் தம் மனைவியென வாதிட்ட கணவனுக்கு, அவன் மனைவியாகிய அவள் தான் சுட்டும் இவள் என்று காட்டியதால், நல்லூர், அவள் இவள் நல்லூர் என்று பெயர் பெற்றதாம். இக்கதை கர்ப்பகிருகத்தின் பின் பக்கத்தில் செதுக்கப்பட்டிருக்கின்றது என்பர்.