அச்சிறுபாக்கம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அச்சிறுபாக்கம் அல்லது அச்சரபாக்கம் ஆட்சீஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். செங்கற்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது. விநாயகரை வணங்காது திரிபுரம் எரிக்கச் சென்ற இறைவனுடைய தேர் அச்சு முறிந்த இடம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
இறைவன் | பாக்கபுரேசுரர்[1] |
இறைவி | சுந்தரநாயகி |
தீர்த்தம் | வேததீர்த்தம் |
விருட்சம் | கொன்றை |