அகச்சிவப்புக் கதிர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அகச்சிவப்பு கதிர்கள் (Infrared) ஒரு மில்லி மீட்டர் முதல் ஒரு மீட்டரில் 70 கோடியில் ஒரு பங்கு (700 நானோமீட்டர்) வரை அலைநீளம் கொண்டவை. அகச் சிவப்புக் கதிர்கள் ஒருவகை மின்காந்தக்(Electromagnetic) கதிர்களாகும், இவற்றின் அலை நீளம் ஒளி அலைகளினதை விட அதிகம். நுண்ணலை(Microwave)களினதைவிட குறைவு. எனவேதான் இவை வெறும் கண்களுக்குத் தெரிவதில்லை. ஒளி அலைகளில் மிக அதிக அலைநீளம் உடையது சிவப்பு நிறம். அதனயடுத்து இருப்பதினாலேயே, இவ்வலைகள் அகச்சிவப்புக் கதிர்கள் எனப் பெயர்பெறுகின்றன. பெரும்பாலோர் உடலில் தசைப் பிடிப்புக்கு அகச்சிகப்பு விளக்கு மூலமாக வெப்ப சிகிச்சை பெறுவதால் இந்த அலையுடன் ஒரு அறிமுகம் ஏற்பட்டிருக்கும்.
நெருப்பு போன்ற அதிக வெப்பம் வெளியிடுவனவற்றிலிருந்து அகச்சிவப்புக் கதிர்கள் அதிக அளவில் வெளியாகும். நாம் சற்று நேரம் அமர்ந்து எழுந்து போன இருக்கையில் நமது உடல் வெப்பத்தினால் ஏற்பட்ட அகச்சிகப்புக் கதிர்கள் கொஞ்ச நேரத்திற்கு மிச்சமிருக்கும். சிறப்பு கருவிகளைக்கொண்டு அகச் சிவுப்புக் கதிர்களை அவதானிக்கலாம். அதனால் அகச் சிவுப்புப் பார்வை/படங்கள், இரவில் பார்ப்பதற்கு இராணுவத்தினரால் பயன்படுத்தப்படுகிறது. காட்டுத்தீ போன்ற பெரு விபத்துக்களில் புகை மண்டலத்தினூடே எரியும் இடங்களை அகச்சிகப்புக் பைனாகுலர்கள் வழியாக தெளிவாகக் காணலாம்.