மாநகரசபை (இலங்கை)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இலங்கையில் மாநகரசபை என்பது, ஒரு உள்ளூராட்சி அமைப்பாகும். இது, அந் நாட்டிலுள்ள உள்ளூராட்சி அமைப்புக்களின் தரவரிசையில் முதல் நிலையில் உள்ளது. பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில், 1885 ஆம் ஆண்டில் மாநகரசபைகள் உருவாக்கப்பட்டன. 1885 ல், கொழும்பு, கண்டி ஆகிய நகரங்களிலும், 1886 ல், காலியிலும் மாநகரசபைகள் அமைந்தன. பலகாலமாக இலங்கையின் இரண்டாவது பெரிய நகரமாக இருந்துவந்த யாழ்ப்பாணத்தின் உள்ளூராட்சி 1949 ஆம் ஆண்டிலேயே மாநகரசபை நிலைக்கு உயர்ந்தது. இலங்கையில் தற்போது 14 மாநகரசபைகள் உள்ளன.