See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
புவியியல் தகவல் முறைமை - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

புவியியல் தகவல் முறைமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

புவியியல் தகவல் முறைமை (GIS) என்பது, தகவல்களையும், இடஞ்சார் முறையில் புவியுடன் தொடர்பு குறிக்கத்தக்க வேறு தொடர்பான விடயங்களையும் பெறுதல், சேமித்தல், பகுத்தாய்தல், மேலாண்மை செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு முறைமை ஆகும். உண்மையில், இது, புவியியல் ரீதியில் தொடர்பு குறிக்கத்தக்க தகவல்களை ஒருங்கிணைக்கவும், சேமிக்கவும், தொகுக்கவும், பகுத்தாயவும், பகிர்ந்து கொள்ளவும், காட்சிப்படுத்தவும் வல்லமை கொண்ட ஒரு கணினி முறைமை ஆகும். பொதுவான நோக்கில், புவியியல் தகவல் முறைமை என்பது, பயனர்கள், தாங்கள் உருவாக்கிய தேடல்கள் போன்றவை மூலம் கணினியுடன் ஊடுதொடர்பாடல்களைப் பேணவும், இடஞ்சார் தகவல்களைப் பகுப்பாய்வு செய்யவும், தரவுகளைத் தொகுக்கவும், இத்தகைய செயற்பாடுகளின் விளைவுகளைச் சமர்ப்பிக்கவும் இடந்தரக்கூடிய ஒரு சாதனமாகப் பயன்படக்கூடியது. இந்த முறைமைக்கு அடிப்படையாக உள்ளது, புவியியல்சார் தகவல் அறிவியல் (Geographic information science) என்னும் அறிவியல் துறையாகும். இது பல பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்புக்கான ஒரு துறையாக உள்ளது.

[தொகு] பயன்பாடுகள்

புவியியல்சார் தகவல் முறைமைத் தொழில்நுட்பத்தைப் பல்வேறு துறைகளிலே பயன்படுத்திக் கொள்ள முடியும். அறிவியல் ஆராய்ச்சி, வள மேலாண்மை, சொத்து மேலாண்மை, சூழல்சார் தாக்க மதிப்பீடு (Environmental Impact Assessment), நகர்ப்புறத் திட்டமிடல், நிலப்படவரைவியல், குற்றவியல், வரலாறு, விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் கண்ணிவெடி நடவடிக்கை [1] போன்ற துறைகளில் இது பெரிதும் பயன்படக்கூடியது. எடுத்துக்காட்டாக, இயற்கை அழிவுகளின்போது, அவசரகால உதவிகள் அணுகுவதற்கான கால அவகாசங்களை இலகுவில் கணிப்பதற்கு, அவசரகாலத் திட்டமிடுபவர்களுக்கு இது உதவும். சூழல் மாசடைதல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான இடங்களைத் தெரிவு செய்வதிலும் புவியியல்சார் தகவல் முறைமைத் தொழில்நுட்பம் பங்காற்ற முடியும். புதிய வாடிக்கையாளர்களை அடையாளம் கண்டு, அவற்றின்மூலம் ஏற்படும் சந்தை விரிவாக்கத்தினால் ஏற்படக்கூடிய விற்பனை வளர்ச்சிகளைக் கண்டறிவதற்கும் இம் முறைமையினை நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

[தொகு] உசாத்துணைகள்


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -