பழைய ஏற்பாடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பழைய ஏற்பாடு கிறிஸ்தவ விவிலியத்தின் முதலாவது பகுதியாகும். இது எபிரேய வேதவசனங்கள் அல்லது எபிரேய விவிலியம் எனவும் அழைக்கப்பட்கிறது. இது நீதிநூல்கள், வரலாற்று நூல்கள், கவிதை நூல்கள், மற்றும் தீர்க்கதரிசன நூல்கள் என்ற பகுதிகளை கொண்டுள்ளது. கிறித்தவ சமய நம்பிக்கையின்படி, இது உலகம் படைக்கபட்டது தொடக்கம் இயேசு இவ்வுலகிற்கு வரும் வரையான காலப்பகுதியில் கடவுள் மக்களுடன் தொடர்பு கொண்ட முறைகளையும் இஸ்ரவேலரின் வரலாறையும் கூறி நிற்கிறது.
இவ்வெல்லா நூல்களும் இயேசுவின் பிறப்புக்கு முன்னர் எழுதப்பட்டவையாகும். வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துப்படி பழைய ஏற்பாட்டின் ஈப்ரூ வடிவம் கி.மு. 12-ஆம் நூற்றாண்டிற்கும் கி.மு. இரண்டாம் நூற்றாண்டிற்கும் இடையே எழுதப்பட்டிருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.[1]
பழைய ஏற்பாடு நூல் "இயேசுவின் பிறப்புக்கு" முன்னர் எழுதி முடிக்கப்பட்டுவிட்டது. இது ஆண்டவருக்கும் மனிதனுக்கும் இடையிலான பழைய உடன்படிக்கையாகும். பொதுவான நூல் 39 நூல்களைக் கொண்டுள்ளது.
கத்தோலிக்க விவிலியம் மொத்தம் 46 நூல்களையும், மரபுவழி விவிலியம் மொத்தம் 51 நூல்களையும் கொண்டுள்ளது.
பழைய ஏற்பாடில், "உலகத்தின் தோற்றம்" "மனிதனின் படைப்பு" "மூதாதேயர்" "வழிமரபினர்" "மோசேயின் சட்டம்" "தீர்க்கதரிசனம்" "சங்கீதம்"..."வேதாங்கம்". என்பன காணப்படுகின்றன.
சரித்திர நூல்கள் 17 (வரலாற்று நூல்கள் 12, இலக்கிய நூல்கள் 5). ஆகமம் 5(பாடலும் படிப்பினையுமான நூல்கள்). தீர்க்கதரிசன நூல்கள் 17.
வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டு நூலானது புதிய ஏற்பாட்டு நூலில் நிறைவு காண்கிறது. ஏனெனில் பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசனங்கள் புதிய ஏற்பாட்டில் முற்றுப் பெறுகிறது.
புதிய ஏற்பாடு, ஆண்டவருக்கும் மனிதனுக்கும் இடையிலான புதிய உடன்படிக்கையாகும். அது 27 நூல்களைக் கொண்டுள்ளது. சரித்திர நூல்கள் 5 (நற்செய்திகள் 4, அப்போஸ்தலர் பணி 1). நிருபங்கள் 21 (பவுல் நிருபங்கள் 10, போதனை நிருபங்கள் 4, பொதுவான நிருபங்கள் 7). திருவெளிப்பாடு நூல்கள் 1.
"வேதாகமம்" ஆண்டவர் எப்படி உலகத்தையும் அதில் உள்ள அனைத்தையும் படைத்தார் என்று தொடங்கி, ஆண்டவர் உலகத்தை எப்படி நியாயந்தீர்ப்பார், பாவத்தை அழிப்பார், அவரது முடிவில்லா நீதியின் அரசை அமைப்பார் என்று "வெளிப்படுத்தல்" நூலில் முடிவு பெறுகிறது.
முதல் தமிழ் மொழிபெயர்ப்பு 1723இல் தரங்கம்பாடி, இந்தியாவில் வெளியிடப்பட்டது.
முதல் ஆங்கில விவிலியம் கிங் ஜேம்ஸ்.King-James-Bible (The holy bible).
- For other uses of King James Version, see [[Image:KJV-King-James-Version-Bible-first-edition-title-page-1611.jpg|200px|thumb|center|The title page to the 1611 first edition of the King James Bible by Cornelius Boel
[தொகு] குறிப்புகளும் மேற்கோள்களும்
- ↑ Encyclopaedia Britannica: "Written almost entirely in the Hebrew language between 1200 and 100 BC"; Columbia Encyclopedia: "In the 10th century BC the first of a series of editors collected materials from earlier traditional folkloric and historical records (i.e., both oral and written sources) to compose a narrative of the history of the Israelites who now found themselves united under David and Solomon."