தியாகி விஸ்வநாததாஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தியாகி விஸ்வநாததாஸ் (1886 - டிசம்பர் 12, 1940) நாடக நடிகர்களிலேயே தலைசிறந்த தேசியவாதியாகத் திகழ்ந்தவர். இளம் வயதிலேயே நாட்டின் விடுதலைக்காகப் போராடும் தலைவர்களுடன் நட்புணர்வு கொண்டவர்.
இவரது உணர்ச்சி மிகுந்த தேசபக்தி நாடகத்தினால் அண்ணல் காந்தியடிகளால் பாராட்டப் பெற்றவர். 1919 இல் பஞ்சாப் படுகொலை நடந்தபோது “பஞ்சாப் படுகொலை பாரிர் கொடியது பரிதாபமிக்கது” என்று பாடி தேசப்பற்றை மக்களுக்கு ஊட்டியவர். இவரின் நாடகங்களுக்கு அரசாங்கம் விதித்த தடையை மீறி சிறைத் தண்டனை பெற்றவர். ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டு சிறைவாசம் சென்றவர். இவருக்கிருந்த தேசபக்தியைக் கண்டு ஆங்கிலேய அரசு அஞ்சியது.
இவர் திருமங்கலம் வட்ட காங்கிரஸ் கமிட்டியிலும், மதுரை ஜில்லா போர்டிலும், காங்கிரஸின் சார்பில் உறுப்பினராக இருந்தவர். வேடம் தரிப்பதற்கான உடைகளையும், கதர்த் துணியிலேயே தயாரித்து அணிந்து நடத்தவர். இவரது “கொக்கு பறக்குதடி பாப்பா” என்ற பாடல் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.