சிந்து நதி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சிந்து நதி (Indus) பாகிஸ்தானில் பாயும் முக்கியமான ஆறாகும். இவ்வாறு இமய மலைத் தொடரில் கயிலை மலையில் மானசரோவர் அருகே தொடங்கி காஷ்மீர், மற்றும் பாகிஸ்தான் வழியாகச் சென்று அரபிக் கடலில் கலக்கிறது. இவ்வாற்றின் மொத்த நீளம் 2900லிருந்து 3200 கி.மீ. வரை இருக்கும். சிந்து சமவெளி நாகரிகம் இவ்வாற்றுப் படுக்கையிலே தோன்றி வளர்ந்த பழம் பண்பாடு. சிந்து நதியின் அமைவிடத்தை அடிப்படையாகக் கொண்டு இந்நதியின் கிழக்குப் பகுதியின் பெருநிலத்தை இந்தியா என்றும், அப்பகுதி மக்களை இந்து என்றும் பண்டைய ஐரோப்பியர் அழைத்ததே இன்றைய இந்தியாவின் பெயர்க் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. (ஃஇந்துகுஷ் மலையில் இருந்து வந்ததாகவும் கூறுவர்)