Web Analytics

See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
இம்சை அரசன் 23ம் புலிகேசி (திரைப்படம்) - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

இம்சை அரசன் 23ம் புலிகேசி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

இம்சை அரசன் 23ம் புலிகேசி
இயக்குனர் சிம்புதேவன்
தயாரிப்பாளர் எஸ்.பிக்ஸர்ஸ் Director ச.சங்கர்
கதை சிம்புதேவன்
நடிப்பு வடிவேலு
தேஜாஸ்ரீ
நாசர்
மனோரமா
இசையமைப்பு சபேஷ் முரளி
ஒளிப்பதிவு ஆர்தர் வில்சன்
வினியோகம் ஆஸ்கர் பிலிம்ஸ்
வெளியீடு 2006
மொழி தமிழ்

இம்சை அரசன் 23ம் புலிகேசி 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.வடிவேலு இரட்டை வேடங்களில் கதாநாயகனாக முதன் முதலாக நடித்த இத்திரைப்படத்தினை சிம்புதேவன் இயக்கியது குறிப்பிடத்தக்கது.இத்திரைப்படத்தில் நாசர், ஸ்ரீமன், இளவரசு, மோனிக்கா, மனோராமா போன்ற பலர் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பொருளடக்கம்

[தொகு] வகை

நகைச்சுவைப்படம்

[தொகு] கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும் / அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வியாபாரம் செய்வதாகக் கூறி இங்கு வந்த ஆங்கிலேயர்கள் பிறகு நாடுகளைக்கைப்பற்றும் செயலில் தீவிரமாக இருந்த காலகட்டத்தில் கட்டபொம்மன், மருதுசகோதரர்கள் தீரன் சின்னமலை போன்ற குறுநில மன்னர்களும்,பாளையக்காரர்களும்,அவர்தம் தளபதிகளும் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு வீரமரணடைந்த வேளையில், சில பாளையக்காரர்கள் என்றழைக்கப் பட்ட குறுநிலமன்னர்கள் ஆங்கிலேயருக்குப் பெரிதும் உதவினர். இத்திரைப்படமும் அவ்வாறான ஓர் குறுநில மன்னனின் கதையாகும்.

1771ஆம் ஆண்டில் சோளபுரத்தில் இத்திரைக்கதை ஆரம்பமாகின்றது. சிவகங்கைப் பாளையத்தில் சோளபுர மன்னனின் நண்பர் வரிகொடா இயக்கத்தை ஆரம்பிப்பதாலும், ஹைதர் அலி வெள்ளையர்களைத் துவம்சம் செய்து கொண்டிருப்பதாலும் சோளபுர மன்னன் பதட்டமடைகின்றான். வெள்ளையரை எதிர்த்துப் போராட வாரிசு இல்லாமை மன்னரை வாட்டி வதைக்கின்றது. இந்நிலையில் மன்னருக்குக் இரட்டை ஆண்குழந்தைகள் பிறக்கின்றனர். இதை மந்திரியிடம் மருத்துவர் எடுத்துக் கூறுகின்றார். சோளபுரத்தை வளைத்துப் போடும் எண்ணம் கொண்ட மந்திரியோ ஒரு குழந்தை இருந்தால்தான் நல்லது என்று நினைத்து அவற்றின் ஜாதகத்தைக் கணிக்குமாறு சோதிடரிடம் கேட்கின்றார். முதலாவது குழந்தை சொற்புத்தி இரண்டாவது குழந்தை சுயபுத்தியுடையதாகக் சோதிடர் ஆரூடம் கூறுகின்றார். தன்னுடைய கட்டளைக்கு எப்பொழுதும் அடிபணிய, சொற்புத்தி கேட்பவனே நல்லது என முடிவெடுத்து மருத்துவரிடம் இரண்டாவது குழந்தையை கள்ளிப்பால் கொடுத்துக் கொன்றுவிடுமாறு ஆணையிடுகின்றார். மருத்துவரோ "ஆண் குழந்தைக்குக் கள்ளிப்பாலா" என வினாவுகின்றார். வளர்பிறைக் காலத்தில் குழந்தையைக் கொல்வது அரண்மனைக்கு நல்லதல்ல என்று சோதிடர் கூறியதால் அக்குழந்தையினை யாரும் கண்காணாத இடத்தில் விட்டுவிடலாம் என்று முடிவெடுத்து இரண்டாவது குழந்தை பாண்டிய தேசத்தின் எல்லைப் புறத்தில் உள்ள வைகை ஆற்றில் விடப்படுகின்றது.

இக்குழந்தையை பிள்ளைகள் இல்லாத மருத்துவரின் மனைவி ஆற்றில் கண்டெடுத்து வீட்டிற்குக் கொண்டு வருகின்றார். மருத்துவரும் பின்னர் குழந்தையை வளர்க்கச் சம்மதிக்கின்றார். இக்குழந்தை உக்ரபுத்திரன் எனப் பெயரிடப்பட்டு வளர்கின்றது.

மற்றக் குழந்தை அரண்மனையில் 22 குழந்தைகளுக்குப் பின்னர் 23 ஆவதாக உயிருடன் பிறந்ததாலும் ஹைதர் அலியைச் சந்திக்கச் சென்றபோது புலிகேசிநாதனை வேண்டித் தவமிருந்து பெற்றதால் 23ஆம் புலிகேசி எனப் பெயர் சூட்டப் படுகின்றது. பெயர் சூட்டுவிழாவில் குழந்தை அழுகின்றது இதற்குக் காவலாளியைக் குறைகூறி மந்திரி அறைகின்றார் இதனைப் பார்த்த குழந்தை சிரிக்கின்றது, எனவே மக்கள் அனைவருக்கும் அறைவிழுகின்றது. இப்பொழுதே தங்களை வருத்தும் இக்குழந்தை அரசனாகினால் எப்படியிருக்கும் என மக்கள் பரிதவிக்கின்றனர்.

அரசனாகியதும் தந்தையின் படத்திற்கு பூக்களால் அர்ச்சித்து மாவீரன் நெப்போலியன் போல், அலெக்சாண்டர் போல், சாம்ராட் அசோகர் போல் தானும் ஓர் சக்கரவர்த்தியாக வேண்டும் என்று பூசிக்கின்றான். பூசை முடிந்து வரும்போது அர்ச்சகரை நிந்தித்துத் தண்டனைகளை வழங்குகின்றான். பின்னர் அன்னையிடம் ஆசீர்வாதம் பெற்று வருகையில் அன்னையோ ராஜ ராஜ 23ஆம் புலிகேசி நீ நீடூழி வாழ வேண்டும் என ஆசீர்வதிக்கின்றார். எனினும் அவனது நடத்தைகளைக் கண்டிக்கின்றார்.

அரியாசனத்திற்குப் போகும் வழியில் துதிபாடுபவன் தன்னைப் புகழ்ந்து பாடும் பொழுது பெயரில் ஓர் வரியை விட்டுவிட்டான் என்பதற்காத் தண்டனை வழங்குகின்றான். இவ்வாறாக இம்சைகள் தொடர்கின்றன. இந்நிலையில் நிக்ஸன் துரை அரசரிடம் கப்பம் வாங்குவதற்காக வருகின்றார். அங்கே மதுபானம் விற்பதற்கு அனுமதி கேட்கின்றனர். இராஜ குருவே இதற்கெதற்கு அனுமதி தாராளமாக ஆரம்பிக்கலாம் என்கிறார். பின்னர் தங்கக் கிணறு தோண்டும் பணிகளை வெள்ளையருக்குக் காட்டிவிட்டு அந்தப்புரத்திற்கு வந்து லீலைகள் புரிகின்றார்.

தளபதி அகண்டமுத்து வெள்ளையருக்குத் மன்னர் இவ்வாறு உதவி செய்வதனை விரும்பாமல் வீரத்தமிழர்கள் குட்டக் குட்டக் குனியக் கூடாது என்ற பொருள்படப் பேசுகின்றார். மன்னரோ எவற்றையும் பொருட்படுத்தாது எடுத்தெறிந்து பேசுகின்றார்.

பாலபத்திர ஓணாண்டி என்னும் புலவர் அரசரிடம் பாடல் பாடிப் பரிசு பெற அரசவைக்கு வருகிறார். புலவரோ

மன்னா மாமன்னா நீ ஓர் மாமா மன்னா
பூமாரி தேன்மாரி நான்பொழியும் நீ ஓர் முல்லைமாரி
அரசியலில் நீ தெள்ளியதோர் முடிச்சவிக்கி
தேடிவரும் வறியவர்க்கு மூடா
நெடுங்கதவு உன்கதவு
என்றும் மூடாமல் மறைக்காமல் நீ உதவு
எதிர்த்து நிற்கும் படைகளை நீ புண்ணாக்கு
மண்ணோடு மண்ணாகு
அகிலங்களைக் காக்கும் ஓர் அண்டங்காக்கா....

என்று தொடர்கையில் மனனரோ பாடுவதை நிறுத்துகின்றார். புலவரிடம் திட்டியதற்குக் காரணங்களைக் கேட்கின்றார். புலவரோ திட்டவில்லை என்றும் அவற்றை பொருள்படப் பிரித்துப் படித்துக் காட்டியும் அவரைத் தலைகீழாகத் தொங்கவிட்டுத் தண்டிக்கின்றார்.

உக்கரபுத்திரனோ நாளங்காவில் கல்விகற்றவேளையில் நாட்டுப் பற்று இயக்கத்தில் ஒரு வருடம் கடுமையான பயிற்சிபெற்றுத் ஊருக்குத்திரும்பியிருந்தான். மக்களை மதிக்காமல் ஆட்சிநடத்தும் 23ஆம் புலிகேசி பற்றிய தகவல்களைத் திரட்டுகின்றான்.

இவ்வாறிருக்க அரண்மனையில் உற்சாக பானம் தயாரிக்கும் அருவருப்பூட்டும் வழிமுறைகளை வெள்ளைக்காரர் கூறுகையில் அரண்மனைக் காவலாளி ஒருவன் வாந்தியெடுக்கின்றார். மன்னரோ தனக்கு வாந்தியே வராது எனத் தம்பட்டம் அடித்து விட்டுச் சிறுநேரத்தில் வாந்தியெடுகின்றார்.

மன்னரோ ஆங்கிலத்தில் தலைப்பு வைக்க வேண்டாம் என்கின்றார். ஓர் பானத்துக்கு ஆங்கிலத்தில் "சிஸ்டர் மாலா" என்றும் தமிழில் "அக்கா மாலா" என்றும் பெயரிடுகின்றனர் மற்றது "கப்சி" என்றும் பெயரிடப்படுகின்றது.

நிக்ஸன் துரையைத் தாக்கியவன் அசல் புலிகேசி போன்றே இருப்பதாகவும் குறிபார்த்துக் தாக்கியதாகவும் மன்னனுக்குச் செய்தி கிடைக்கின்றது. மன்னனின் பக்கத்தில் இருப்பவரோ குறிபார்ப்பதற்கும் மன்னருக்கும் சம்பந்தமில்லை என்று உண்மையை உளறுகின்றார். இந்நிலையில் ஜாதிப்பிரச்சினை அரண்மைக்கு வருகின்றது. இரு குழுக்கள் ஓர் குழு நாகபதினி ஜாதியையும் இன்னோர் குழு நாகப்பதினி ஜாதியையும் சேர்ந்தாகவும் தாங்களே மூத்தகுடிமக்கள் என்று இரு குழுக்களும் அடிபடுகின்றன. நிறுத்துமாறு கோரிய மன்னன் புதிகாக ஓர் மைதானம் ஒன்றை இரவோடிரவக ஆரம்பித்து முடிக்குமாறு ஆணையிடுகின்றான். அங்கேதான் ஜாதிச் சண்டைகள் நடைபெறும் என்று அறிவிப்புக்ளை விடுகின்றார்.

மைதானத்தை ஆரம்பிக்கையில் ரிபனை இக்காலக் கத்திரிகோல் கொண்டு திறப்பது சற்றே முரணாகவே இருந்தாலும் கதை தொடர்ச்சியாக சுவாரசியமாகவே செல்கின்றது.

உக்கரபுத்திரன் வழிப்பறி நடைபெறுவதைத் தூரத்தில் இருந்து அவதானிக்கின்றார். இவ்வழிப்பறியில் தன்னைப் போன்றே இருந்த மன்னரே ஆதரவு வழங்குவதைப் பார்க்கின்றார். உக்கரபுத்தரன் வீட்டில் இதைச் சொல்கின்றார். மருத்துவரோ உண்மையைக் கூறுகின்றார். உக்கரபுத்திரனோ மருத்துவரும் அவரது மனைவியுமே தந்தையும் தாய் என்கின்றார்.

படையெடுத்து வரும் மன்னரிடம் வெள்ளைக் கொடிகாட்டி 23ஆம் புலிகேசி தப்பிக்கின்றான்,. பின்னர் இந்த ஊரில் புரட்சிப் படையணி ஒன்று உருவாகியுள்ளதாகக் கேள்விப் படுகின்றார்.

சிறுவன் கொணர்ந்த போதைப் பொருள் கலந்த இளநீரை மன்னன் கேட்காமல் அருந்தி விடுகின்றார். தளபதியோ மன்னரைத் தீர்த்துக் கட்டும் எண்ணத்துடன் போதைப் பொருள் கலந்த இளநீரை குதிரைகளிற்கு வழங்கியிருந்தான். குதிரைகள் கட்டுக்கடங்காமல் ஓடி உக்ரபுத்திரன் அருகில் 23ஆம் புலி கேசி வீழ்கின்றார். இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய உக்ரபுத்திரன் ஆள் மாறாட்டம் செய்கின்றான். வழியில் தளபதி அநுப்பிய ஆட்களைப் பந்தாடிவிட்டு யார் அனுப்பியது என்று கேட்டுத் தெரிந்து கொள்கின்றார்.

மன்னர் அரண்மனைக்கு வந்ததும் கட்டியம் கூறுபவனை எளிமையாக மன்னர் வருகின்றார் என்று மட்டும் கூறினால் போதும் என்றார். அதன் பின்னர் அக்காமாலா கப்சி பானங்களை விற்கும் வெள்ளையர்கள் இலாப பங்கினைக் கொண்டுவந்தபோது அதன் தயாரிப்பு விலை 2 சதம் என்றும் விற்பனை விலை 10 சதம் என்றும் கூறுகின்றார்.

தளபதி சந்தர்பத்தை தவறவிட்டதாக விட்டதாக வருந்திபோது உக்ரபுத்திரன் வருகின்றான். தளபதி மன்னனின் போரியற் கலைகளை வியக்கின்றார் அப்போது தான் புலிகேசியல்ல என்றும் தான் உக்கரபுத்திரன் என்று இயம்புகின்றார். தனது அண்ணாவை பாதாளச் சிறையில் அடைத்துவிட்டதாவும் இந்த இரகசியத்தை வெளியில் விடவேண்டாம் என்று மன்னர் வேண்டுகின்றார்.

நிக்ஸன் துரை அரண்மனைக்கு வரிப்பணம் வாங்க வந்தபோது அவரை அடித்துக் கலைத்து விட்டான்.

சோதிடரோ அரண்மனையில் உண்மையை உளற புலிகேசியும் உண்மையை ஒட்டுக் கேட்கின்றான். உண்மையை உணர்ந்து இருவரும் இணைகின்றனர். சோதிடரும் ஆருடம் கணித்தபோது இருவரும் பின்னாளில் இணைவர் என்பது தனக்கு மட்டுமே தெரிந்த இரகசியம் என்கின்றார்

பின்னர் இருவரும் இணைந்து நாட்டை மீளமைக்கின்றனர்.

திருமணப்பந்தத்தில் 23ஆம் புலிகேசி மற்றும் உக்ரபுத்திரன் ஆகியோர் 10 புதிய கட்டளைகளுடன் முடிவடைகின்றது.

[தொகு] வெளி இணைப்புகள்

[தொகு] விமர்சனங்கள்

ஏனைய மொழிகள்

Static Wikipedia (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -

Static Wikipedia 2007 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -

Static Wikipedia 2006 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu

Static Wikipedia February 2008 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu