அவனி சூளாமணி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அவனி சூளாமணி கி.பி.600 முதல் - 625 வரை பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்த பாண்டிய மன்னனாவான்.பாண்டிய மன்னர்கள் சடையவர்மன்,மாறவர்மன் என்ற பெயர்களை தம் பெயர்களிற்கு முன்னர் சூட்டுக் கொள்வது வழக்கம் அஃது போலவே அவனி சூளாமணியும் தன் பெயரை மாறவர்மன் அவனி சூளாமணி என அமைத்துக் கொண்டான்.பாண்டியன் கடுங்கோனின் மகனாவான் இவன் என்று வேள்விக்குடிச் செப்பேடு பின்வரும் வரிகளின் மூலம் கூறுகின்றது. "குறுநில மன்னர்களை அடக்கியவன்,குறும்புகளை அழித்தவன்.செங்கோல் ஓச்சியவன்.உலகம் முழுதையும் வெண்கொற்றக் குடைநிழலில் தங்க வைத்தவன்.மானத்தைக் காத்தவன் மரபிலே வந்தவன்.ஒடுங்கா பகை மன்னர்களை ஒடுக்கியவன்.வீரமும்,ஈரமும் புகழும் உடையவன்" .இப்படிக்கூறும் இப்பாடல் வரி அவனி சூளாமணியின் தந்தையையும் இவனையும் குறித்துப் பாடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.உலகத்திற்கே சூளாமணி போன்றவனாகத் திகழ்ந்தான் இவன் என்பது குறிப்பிடத்தக்கது.