சூளாமணி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான சூளாமணி ஒரு சமண சமயம் சார்ந்த நூலாகும். ஜினசேனர் என்பவர் வடமொழியில் எழுதிய மகாபுராணம் என்னும் நூலைத்தழுவித் தமிழில் ஆக்கப்பட்டதே இந் நூல். 12 சருக்கங்களாகப் பிரிக்கப்பட்ட 2131 பாடல்கள் இந்நூலில் உள்ளன.
சுரமை நாட்டின் இளவரசனான திவிட்டன் என்பவன், வித்தியாதர நாட்டு இளவரசி ஒருத்தியை மணந்து கொண்டதனால் ஏற்பட்ட சிக்கல்களையும் அதனால் திவிட்டன் நிகழ்த்திய வீரச் செயல்களையும் கூறும் இக் கதைப் பின்னணியில் சமண சமயத் தத்துவங்களை விளக்குகிறார் இதன் ஆசிரியர்.
சமணத் தத்துவங்கள் பேசு நான்கு வகையான பிறவிகள் பற்றி விரிவாக விளக்குகிறது இந்நூல். இந் நான்கு பிறவிகளுள் மனிதப் பிறவியில் மட்டுமே வீடுபேறு அடைவதற்கான முயற்சிகளைச் செய்யும் வாய்ப்பு உண்டென்றும் அதனால் மனிதப் பிறவி எடுத்த அனைவரும் அதற்கான முயற்சிகளைச் செய்ய வேண்டும் என்றும் கருதும் சமணக் கோட்பாடுகளின் வழி நின்று அதற்கான வழிமுறைகள் பற்றி இந் நூல் எடுத்தியம்புகிறது.