வுலிங்யுவான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வுலிங்யுவான் காட்சி மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பகுதி* | |
---|---|
யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம் | |
நாடு | சீனா |
வகை | இயற்கை |
Criteria | vii |
Reference | 640 |
பகுதி† | ஆசியா-பசிபிக் |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1992 (16ஆவது அமர்வு) |
* பெயர் உலக பாரம்பரியப் பட்டியலில் குறித்துள்ளபடி. † பகுதி, யுனெஸ்கோவினால் வகைப்படுத்தப்பட்டபடி. |
வுலிங்யுவான் சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள காட்சி மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு பகுதியாகும். இப்பகுதி, ஏறத்தாழ 3100 உயரமான மணற்கற் தூண்களினால் பெயர் பெற்றது. இவற்றுட் சில 200 மீட்டர்களுக்கு மேல் உயரமான இவை மென்மையான பாறைகள் கரைந்ததனால் ஏற்பட்ட அமைப்புக்கள் ஆகும். இது ஹுனான் மாகாணத்தின் தலைநகரான சாங்ஷாவிலிருந்து 270 கிமீ தொலைவில் உள்ள சாங்ஜியாஜியே (Zhangjiajie) நகரின் ஒரு பகுதியாகும். இவ்விடம் அமைவு: மற்றும் ஆள்கூறுகளிடையே அமைந்துள்ளது. 1992 ஆம் ஆண்டில் இப்பகுதி யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.