விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் பௌத்தம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
விக்கித் திட்டம் பௌத்தம் உங்களை வரவேற்கிறது. இத்திட்டம் பௌத்த சமயம் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகளை இயற்றவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. கீழ்க்கண்ட தலைப்புகளில் தாங்கள் கட்டுரைகளை இயற்றலாம், உதவிக்கு தேவைப்பட்டால் ஆங்கில விக்கிபீடியாவை நாடவும். இந்த திட்டத்தில் தங்களை இணைத்துக்கொள்ள இங்குள்ள 'பயனர்' பகுதியில் தங்கள் பெயரை சேர்க்கவும்.
குறைவான அளவில், பல கட்டுரைகளை இயற்றுவதை விட, நிறைவான சில கட்டுரைகள் இயற்றுதல் நலம்.
முதலில் ஆங்கில விக்கிபீடியாவில் உள்ள அனைத்து போதிசத்துவர்கள்,புத்தர்க்ளை மற்றும் புத்த பிரிவுகள்ககுறித்து கட்டுரைகளை இங்கே சேர்க்கலாம்.ஆங்கில விக்கிபீடியாவில் குறுங்கட்டுரைகளாக உள்ள நிலையில் தங்களால் இயன்ற அளவுக்கு தேடுபொறி உதவியுடன் தகுந்த ஆதாரங்களுடன் தமிழ் நிறைவான கட்டுரைகள் இயற்றவும்.
[தொகு] பயனர்கள்
- Vinodh.vinodh (No Longer Active)
- Mayooranathan
- செல்வா (இயன்றளவு பங்களிப்பேன், பங்கு பற்றுவதில் காலத்தாழ்வுகள் ஏற்படும்)
- Natkeeran
[தொகு] பேச்சுப் பக்கத்தில் வார்ப்புரு இட வேண்டல்
விக்கித் திட்டம் பௌத்தம் தொடர்பான கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில், {{விக்கித்திட்டம் பௌத்தம்}} என வார்ப்புருக்கான குறிப்பை இடுங்கள். அந்த வார்ப்புரு கீழ்க்காணுமாறு தோற்றமளிக்கும்.
[தொகு] மொழிபெயர்ப்பு உதவி
ஆங்கில விக்கிபீடியாவில் இருந்து மொழி பெயர்க்கையில் கீழ்க்கண்டவற்றை மாதிரியாக பயன்படுத்துதல் நலம்
- Buddhahood - புத்தநிலை அல்லத புத்தத்தன்மை
- Esoteric - மறைபொருள்
- -hood - நிலை அல்லது தன்மை
- Compassion - கருணை
- Liberation - மோட்சம், வீடுபேறு
- Enlightenment - ஞானம் கிடைத்தல்
- Bodhi - போதி
- Prajna - பிரக்ஞை (தகுந்த தமிழ்ச்சொல்லை குறிப்பிட்டால் நன்று)
- Salvation - ரட்சிப்பு
- Bodhisattva - போதிசத்துவர்
- Tathagatha - ததாகதர்
- Pure Land - சுகவதி
- Emptiness - சூன்யத்தன்மை
- Dzogchen - அதியோகம்
பௌத்த சூத்திரங்களின் பெயர்களை மொழிப்பெயர்க்கும் பொதுவழக்கு இல்லத நிலையில் அவற்றின் ஆங்கில பெயர்க்ளை பெயர்க்காமல் கூடுமான வரை அந்த சூத்திரங்களின் பாளி அல்லது சமஸ்கிருத பெயர்களை பயன்ப்படுத்தவும். உதாரணமாக 'Sutra of Infinite Life' என்பதை அதன் மூல பெயரான 'சுகவதிவியூக சூத்திரம்' என மொழிபெயர்க்கவும். அதன் மூல பெயர் ஆங்கில விக்கிபீடியாவில் இல்லாவிட்டல் கூகுள் உதவியை தயவு செய்து நாடவும்.
மேலும் முடிந்த வரை மூல சொற்களையும் அதன் தமிழ்மொழிபெயர்ப்புகளையும் பயன்படுத்தவும். ஆங்கில சொற்களின் மொழிபெயர்ப்புகளை தவிர்க்கவும். உதாரணமாக, போதிசத்துவர்கள் கடக்க வேண்டிய பத்து பூமிகளை குறிக்கையில் அவற்றின் ஆங்கில வடிவத்தை அப்படியே மொழிபெயர்க்காமல் அதன் மூல வடமொழிச்சொல்லையும், அதன் தமிழ் பொருளையும் கூறியுள்ளதை காண்க. வடமொழி சொற்களின் பொருள் கூறாதிருப்பின் தமிழ்ப் பொருளைத் தேட 'வடமொழி அகராதியை நாடவும்'.பாளி மொழிக்கும் இணையத்தில் பல அகராதிகளின் உள்ளன, பாளி சொற்களின் பயன்பாடு மற்றும் மொழிபெயர்ப்புக்கு அவற்றை பயன்படுத்தவும்
வடமொழி மின் அகராதி, பதிவிறக்கம் செய்து பயன்படுத்துக
[தொகு] கட்டுரைகள இயற்றுதலுக்கான வழிமுறைகள்
கட்டுரைகள் இயற்றுவதற்கு ஆங்கில விக்கி கட்டுரைகளை மூலமாக கொள்ளும் நிலையில், தயவு செய்து கீழ்க்கண்ட வழிமுறையை கையாளவும்
- ஆ.வி கட்டுரையை அப்படியே மொழிப்பெயர்ப்பதை முடிந்த அளவு தவிர்க்கவும். எடுத்துக்காட்டாக கட்டுரையில் பயன்படுத்தப்படும் உதாரணங்களை இந்திய துணைக்கண்ட சூழலுக்கு ஏற்றவாறு தரலாம்.
- ஆ.வி கட்டுரையை மொழிப்பெயர்க்கும் முன்னர் அந்த கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் அந்த தலைப்பை குறித்த உரையாடலகளை பார்க்கவும்.
- ஆ.வி கட்டுரை FA (அ) GA (அ) B ஆகிய தரத்தில் இல்லாத நிலையில், கட்டுரையின் உள்ளடக்கத்தை ஒரு முறை சரிபார்க்கவும். இதற்கு பௌத்த மின்-சங்க குழுமம், புத்தாநெட் போன்ற பௌத்த இணைய தளங்களை பயன்படுத்தலாம். தங்கள் சந்தேகங்களையும் இங்கு நிவர்த்தி செய்து கொள்ளவும்
- மேற்கூறிய மூன்று தரத்தில் இருப்பினும் தங்களுக்கு ஏதேனும் கருத்துப்பிழைகள் இருப்பதாக தோன்றினால், மேற்கூறிய இணையதளங்களில் இருந்து தெளிவு பெறலாம்.
- சூத்திரங்கள் குறித்த கட்டுரைகள் இயற்றும் போது, சூத்திரத்தை குறித்த வரலாற்று விவரஙக்ளை ஆ.வி.யில் பெறும் நிலையில், சூத்திரத்தை சுருக்கத்தை இயன்ற அளவுக்கு மூல சூத்திரத்தையே படித்துவிட்டு இயற்றுதல் நலம்.
[தொகு] கேள்விக்குறியான மொழிப்பெயர்ப்புகள்
சம்க்ஞா - Perception (ஆங்கிலத்தில்) - புலனுணர்வு ?? (தமிழில்) பிரக்ஞா - Wisdom (ஆங்கிலத்தில்) - அறிவாற்றல், ஞானம் ?? (தமிழில்)
[தொகு] அடுத்தக்கட்ட பணி (அடுத்த 2-3 மாதத்தில்)
தற்போது கட்டுரைகளின் கிழக்கு-தென்கிழக்காசிய கருத்துகளும் பார்வைகளுமே உள்ளன. இவற்றில் தக்கவாறு தமிழ்-தமிழகம் தொடர்பான கருத்துகளை இணைத்தல். மேலும் திட்டத்தை அடிப்படை நிலையில் அதிவிரைவில் தன்னிறைவு கொள்ளச்செய்தல். முடிந்தால் தமிழ்நாட்டில் பௌத்தம் என்ற கட்டுரையை சிறப்புக்கட்டுரையாக இயற்றுதல். இதன் பின்னர் மேலதிக கட்டுரைகளை இயற்றுதல்.
மேற்படி பணிக்கான மேற்கோள் நூல்: பௌத்தமும் தமிழும்
[தொகு] இப்பணிக்கான பிற மூல நூல்கள்
கீழ்க்கண்ட நூல்களின் பலவற்றுக்கான மூலம் இணையத்தில் கிடைக்கின்றன. இவற்றுக்கு தகுந்த உரை மற்றும் விளக்கங்களுக்கான இணைப்புகளை தந்தால் தகும் அல்லது குறைந்த பட்சம் தேவையான செய்யுளுக்கு விளக்கம் அளிக்க முற்பட்டாலும் நன்று.
- மணிமேகலை
- நீலகேசி
- வீரசோழியம்
- பெரிய புராணம்
- சைவத்திருமுறைகள்
- ஆழ்வார் பாடல்கள்
- ஹுவான் சுவாங்கின் பயனக்குறிப்புகள்
மேலும் அவலோகிதேஷ்வரர் கட்டுரையில் உள்ளது போல இது தொடர்பான பிற ஆராய்ச்சிகளுக்கான சுட்டிகள் ஏதேனும் இருந்தால் வேண்டப்படுகின்றன. தமிழ்-பௌத்தம் தொடர்பான பிற நூல்கள் இருப்பின் அவற்றுக்கான இணைப்புகளும் வேண்டப்படுகின்றன.
மூல நூல்களை நேரடியாக மேற்கோளாக பயன்படுத்தப்படுவது சொந்த ஆய்வு எனக்கருதினால் தங்களது ஆட்சேபனைகளை பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கவும்.
[தொகு] பெரும்பாண்மையான கட்டுரைகளின் சிகப்பு நிற இணைப்புகள்
- சூன்யத்தன்மை
- வஜ்ரயான பௌத்தம்
- ஷிங்கோன் பௌத்தம்
- திரிகாயம்
- ததாகதர்
- திபெத்திய மொழி
- தாமரை சூத்திரம்
- நிர்வாணம்
[தொகு] தன்னிறைவுற்ற பகுப்புகள்
- பகுப்பு:புத்தர்கள் (காசியப, ககுசந்த, மற்றும் பத்மோத்தர புத்தர்களை அதிவிரைவில் சேர்க்க வேண்டும்)
- பகுப்பு:போதிசத்துவர்கள்
- பகுப்பு:யிதம்
- பகுப்பு:தர்மபாலர்கள்
- பகுப்பு:உக்கிர மூர்த்திகள்
இந்த பகுப்புகள் மட்டுமே தன்னிறைவு பெற்றுள்ளன. கீழே உள்ளவை அனைத்தும் பாதியிலேயே(அதற்கும் குறைவாக) உள்ளது.
[தொகு] பாதியில் இருப்பவை
- பகுப்பு:பௌத்த மந்திரங்கள் ---> விரைவில் முடிக்கப்பட வேண்டும்
- பகுப்பு:பௌத்த தேவதாமூர்த்திகள்
- பகுப்பு:டாகினிகள்
- பகுப்பு:மகாயான சூத்திரங்கள் --> விமலகீர்த்தி சூத்திரம் மட்டும் உள்ளது. இன்னும் 5 சூத்திரங்களை சேர்ர்க வேண்டும்.
- பகுப்பு:பௌத்த தத்துவங்கள் --> மகாயானம் தொடர்பான கட்டுரைகள் மட்டுமாவது முடிக்கப்பட வேண்டும்.
- பகுப்பு:பௌத்த பிரிவுகள் - இன்னும் அனைத்து பிரிவுகள் குறித்தும் இயற்றப்பட வேண்டும். இருப்பவை மகாயானம், சுகவதி. முடிக்க வேண்டியவை தேரவாதம், வஜ்ரயானம், பௌத்த பிரிவுகள்(பொதுவான கட்டுரை), ஆதி கால பௌத்த பிரிவுகள், ஷிங்கோன் பௌத்தம்.
“ | ஒவ்வொரு பகுப்பாக தன்னிறைவு பெறும் வகையில் கட்டுரைகள் இயற்றல் வேண்டும். நிறைவற்ற பகுப்புகள் இயற்றுவது தவிர்க்கப்பட வேண்டும் | ” |
[தொகு] மேற்கோள் சுட்டுதல்
விக்கித்திட்டம் பௌத்தத்தின் பெரும்பாலான கட்டுரைகள் ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து மொழிப்பெயர்கப்பட்டவை. பெரும்பாலான கட்டுரைகளில் மேற்கோள் நூல்கள் சுட்டப்பட்டிருப்பினும், மொழிப்பெயர்ப்பு வேகம் கருதி கட்டுரை ஊடான மேற்கோள் சுட்டப்படவில்லை. எனவே கட்டுரைகளை நம்பகத்தன்மை சரி பார்த்துக்கொள்ள, ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரையில் மேற்கோள்களை சரி பார்த்துக்கொள்ளுமாறு வேண்டப்படுகிறது.
[தொகு] மற்ற இயற்றப்பட வேண்டிய தலைப்புகள்(ஆங்கில விக்கிபீடியாவில் இருந்து தருவிக்கப்பட்டது)
புத்தமதம் புத்தரியம் பற்றிய துணைப்பகுப்புகளைக் கீழே காணலாம்.
- புத்தரியக் கலையும் பண்பாடும்
- சீனக் கோபுரங்கள்
- தாது கோபுரம்
- Turning the wheel of the Dharma through pictures
- புத்தமதப் பிரிவுகள்
- சீனப் புத்தமதம்
- Early Buddhist Schools
- கொரியப் புத்தமதம்
- மாத்தியமிகம்
- மகாயான பௌத்தம்
- Nichiren Buddhism
- Nikaya schools
- Pure Land Buddhism
- Soka Gakkai
- தேரவாத பௌத்தம்
- Tiantai
- திபேத்துப் புத்தமதம்
- வஜ்ரயான பௌத்தம்
- ஸென்
- நாடுகள் வாரியாகப் புத்தமதம்
- ஆஸ்திரேலியா
- சீனா
- ஹாங்காங்
- இந்தியா
- ஜப்பான்
- கொரியா
- மியன்மார்
- இலங்கை
- தாய்லாந்து
- திபேத்து
- ஐக்கிய இராச்சியம்
- ஐக்கிய அமெரிக்கா
- பௌத்தர்கள்
- புத்தரின் சீடர்கள்
- கதைகளில் பௌத்தர்
- தேசிய இன வாரியாகப் பௌத்தர்கள்
- பௌத்த தத்துவஞானிகள்
- பௌத்த சங்கம்
- பௌத்த ஆசிரியர்கள்
- பௌத்த எழுத்தாளர்கள்
- புத்தமதமும் தற்கால நடப்புகளும்
- பண்டிகைகள்
- வரலாறு
- பண்டைய மத்தியதரைக் கடல் பகுதியில் புத்தமதம்
- மத்திய ஆசிய பௌத்த அரசுகள்
- மத்திய ஆசிய பௌத்தக் களங்கள்
- புத்தரின் குடும்பம்
- ஊடகம்
- தொன்மங்கள்
- அமைப்புக்கள்
- தத்துவக் கருத்துருக்கள்
- Practices
- மந்திரங்கள்
- தியானம்
- கோயில்கள்
- சொற்கள்
- நூல்கள்
- ஜடகம்
- திரிபிடகம்
- சென் பௌத்த நூல்கள்