வசுதாரா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வசுதாரா(वसुधारा) என்பது வளமைக்கும் செழிப்புக்கும் உரிய ஒரு பெண் போதிசத்துவர் ஆவார். இவரை செல்வத்தின் அதிபதியான குபேரனின் இணையாக கருதுவர்.
[தொகு] பொதுவான கருத்துகள்
வசுதாரா நேபாளத்தில் மிகவும் புகழ் பெற்றவர். அங்கு அனைத்து இல்லங்களிலும் வசுதாரா வழிப்படப்படுகிறார். இவர் ரிக்-வேதத்தில் குறிப்பிடப்படும் வசுக்களுள் ஒருவர்.
[தொகு] சித்தரிப்பு
பொதுவாக இவர் ஆறு கரங்களுடன் காணப்படுகிறார். கீழ் இடக்கரத்தில் இவர் தன்னுடைய அடையாளமாக, பொற்குடத்தையும் கொண்டுள்ளார். அதற்கு மேலுள்ள கரத்தில் தானியங்கள் உள்ளன. மூன்றாவது இடக்கரத்தில் பிரக்ஞாபாரமித சூத்திரம் எனப்படுகிற மகாயான சூத்திரத்தையும் கொண்டுள்ளார். தனது இடக்காலை மடக்கி, வலக்காலை ஒரு கும்பத்தின் மீது ஊன்றுகிறார்.
கீழ் வலக்கரம் தானத்தை குறிக்கும் வகையில் வரத முத்திரையுடன் திகழ்கிறது. அதற்கு மேலுள்ள கரத்தில் மூன்று சிந்தாமணி இரத்தினங்கள் உள்ளன.மூன்றாவது வலக்கரத்தில் அஞ்சலி முத்திரை காணப்படுகிறது.
|
|
---|---|
போதிசத்துவர்களின் பொதுப்பட்டியல் | அவலோகிதேஷ்வரர் · மஞ்சுஸ்ரீ · சமந்தபத்திரர் · ஷிதிகர்பர் · மைத்திரேயர் · மகாஸ்தாமபிராப்தர் · ஆகாயகர்பர் |
சீனப் பௌத்தம் | கந்தர் · சங்கிராமர் |
வஜ்ரயான பௌத்தம் | தாரா · வஜ்ரபாணி · வஜ்ரசத்துவர் · வஜ்ரதாரர் · சீதாதபத்திரை |
மற்றவர்கள் | சூரியபிரபர் ·வசுதாரா |