லோகேஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
லோகேஸ் வானொலி ஒலிபரப்புத் துறையில் அறியப்பட்டவர்.இலங்கை அரியாலையைப் பிறப்படமாகக் கொண்டவர்.புலம்பெயர்ந்து இலண்டனில் வாழ்கிறார்.
இலங்கை வானொலியில் பல முன்னணி அறிவிப்பாளர்கள் பணியாற்றிய காலப்பகுதியில் சம காலத்தில் பணியாற்றியவர். தனக்கென்றொரு வடிவத்தை உருவாக்கியவர்.
ஐ.பி.சி வானொலியின் ஆரம்ப காலங்களில் பல மக்கள் மனதை தொட்டவர். அனைவராலும் 'உங்களில் ஒருவன்' என அன்போடு அழைக்கப்படுபவர்.
அன்று அருணா இசைக்குழுவின் அறிவிப்பாளராய் பல பகுதிகளிலும் மேடைகளில் கம்பீரத்துடன் இவர் குரல் ஒலித்ததை யாரும் மறக்க மாட்டார்கள்...
இன்றும் இவரது குரலில் 'ரெமி ரெக்கோட்ஸ் இறுவட்டுகளின் ஆரம்பக் குரல் ஒலிக்கின்றமை குறிப்பிடத் தக்கது.