See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
மேசகல்யாணி - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

மேசகல்யாணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

மேச கல்யாணி 65வது மேளகர்த்தா இராகம். எப்பொழுதும் பாடக் கூடிய இவ்விராகத்திற்கு மாலைப் பொழுது மிகவும் பொருத்தமானதாகும். நல்ல எடுப்பான இராகம் ஆகையால், நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் பாடக் கூடிய இராகம்.

ஆரோகணம்: ஸ ரி232 ப த2 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி32 ப ம23 ரி2

பொருளடக்கம்

[தொகு] இதர அம்சங்கள்

  • "ருத்ர" என்றழைக்கப் படும் 11வது சக்கரத்தில் 5 வது மேளம். 29வது மேளமாகிய சங்கராபரணத்தின் நேர் பிரதி மத்திம மேளம் ஆகும். பிரதி மத்திம இராகங்களில் மிகச் சிறந்த இவ்விராகம், விரிவான ஆலாபனைக்கு இடம் கொடுக்கும்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • அசம்பூர்ண மேளபத்ததியில் இந்த இராகத்திற்கு சாந்த கல்யாணி என்று பெயர்.
  • பண்டைய மேளமாகிய ஷட்ஜக் கிராமத்தின் காந்தார மூர்ச்சனை கல்யாணி.
  • ஸ்புரித, திரிபுச்ச கமகங்கள் இவ்விராகத்தின் சாயலைக் காட்டும்.
  • இராகம், தானம், பல்லவிக்கு ஏற்ற இராகம்.
  • எல்லா விதமான இசை வகைகளும் இவ்விராகத்தில் இயற்றப்பட்டுள்ளன.
  • ஹங்கேரி நாட்டு இசையிலும் இந்த இராகம் காணப்படுகிறது.

[தொகு] உருப்படிகள்

  1. கிருதி : ஹிமாத்ரி ஸூதே - ரூபகம் - சியாமா சாஸ்திரிகள்.
  2. கிருதி : பதம் தருவாய் - ஆதி - டைகர் வரதாச்சாரியார்.
  3. வர்ணம்: வனஜாக்ஷிரோ - ஆதி - ....
  4. கிருதி : நிதிசால சுகமா - மிஸ்ர சாபு - தியாகராஜர்.
  5. கிருதி : ஆடினதெப்படியோ - ஆதி - முத்துத் தாண்டவர்.
  6. தரு  : வாசுதேவயனி - ஆதி - தியாகராஜர்.
  7. கிருதி : சிதம்பரம் என - ஆதி - பாபநாசம் சிவன்
  8. பதம் : பாரெங்கும் - ஆதி - கனம் கிருஷ்ணய்யர்
  9. கிருதி : தேவி மீனாக்ஷி முதம் - ரூபகம் - தச்சூர் சிங்காரச்சாரியார்
  10. கிருதி : ஸரஸ்வதி நன்னெபுடு - ரூபகம் - திருவெற்றியூர் தியாகய்யர்

[தொகு] மேசகல்யாணியின் ஜன்யராகங்கள்

  1. சாரங்கா
  2. அமிர்தவர்ஷிணி
  3. யமுனாகல்யாணி
  4. ஹமீர்கல்யாணி
  5. ரசமஞ்சரி
  6. மோகனகல்யானி
  7. குந்தலசிறீகண்டி
  8. குந்தலகுசுமாவளி
  9. சதுரங்கணி
  10. கௌரிநிஷாதம்
  11. சுநாதவினோதினி
  12. மைத்திரபாவனி
  13. கௌமோத
  14. கல்யாணதாஹினி
  15. வந்தனதாரினி
  16. சுப்ரவர்ணி
  17. ஸ்மரரஸாளி
  18. கமலோத்ரம்

[தொகு] மேசகல்யாணி இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள்

  1. சிந்தனை செய் மனமே :- அம்பிகாபதி
  2. வந்தாள் மகாலக்ஷ்மியே :- நானும் ஒரு தொழிலாளி
  3. அந்தமான் உந்தன் சொந்தமான்
  4. மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
  5. மன்னவன் வந்தானடி தோழி
  6. அம்மா என்றழைக்காத உயிர் :- மன்னன்
  7. நிற்பதுவே நடப்பதுவே :- பாரதி


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -