மில்லிமீட்டர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
SI அலகுகள் | |
---|---|
1×10−3 மீ | 1 மிமீ |
அமெரிக்க அலகுகள் / பிரித்தானிய அலகுகள் | |
3.2808×10−3 அடி | 39.37×10−3 அங் |
மில்லிமீட்டர் (மில்லிமீற்றர்) என்பது நீள அலகுகளில் ஒன்றாகும். ஒரு மீட்டரின் ஆயிரத்தில் ஒரு பகுதி ஒரு மில்லிமீட்டர் ஆகும். இது 0.039 அங்குலத்துக்குச் (inch) (துல்லியமாக 5/127) சமனானது. மீட்டர் அளவை முறையைப் பயன்படுத்தும் நாடுகளில் சிறிய நீள அளவைகளை அளப்பதற்குப் பயன்படும் அலகு இதுவே. எடுத்துக்காட்டாகக் கண்ணாடித் தகடுகளின் தடிப்பு 6 மில்லிமீட்டர், 10 மில்லிமீட்டர் என்றும் சுவர்களின் தடிப்பைக் குறிப்பிடும்போது 100 மில்லிமீட்டர், 200 மில்லிமீட்டர் எனவும், அறைகளின் நீள அகலங்களைக் குறிப்பிடும்போது 4000 x 5000 மில்லிமீட்டர் எனவும் குறிப்பிடுவது உண்டு. மில்லிமீட்டரைச் சுருக்கமாக மிமீ. என்று எழுதுவது வழக்கம்.
மில்லிமீட்டருக்கு ஒத்த பரப்பளவு அலகு சதுர மில்லிமீட்டரும், கனவளவு அலகு கன மில்லிமீட்டரும் ஆகும். இவற்றை முறையே மிமீ 2 (மில்லிமீட்டர் இரண்டாம் அடுக்கு) என்றும் மிமீ 3 (மில்லிமீட்டர் மூன்றாம் அடுக்கு) என்றும் சுருக்கி எழுதுவது வழக்கம்.
[தொகு] தொடர்புகள்
மீட்டர் அளவை முறையில் மில்லிமீட்டருக்கும் பிற நீள அலகுகளுக்கும் இடையிலான தொடர்புகள் பின்வருமாறு:
- 1 செண்டிமீட்டர் =10 மில்லிமீட்டர்
- 1 சதமமீட்டர்[1] = 10 மில்லிமீட்டர்
- 1 மீட்டர் = 1,000 மில்லிமீட்டர்
- 1 கிலோமீட்டர் = 1,000,000 மில்லிமீட்டர்.
மில்லிமீட்டருக்கும் இம்பீரியல் அளவை முறையில் உள்ள பிற நீள அலகுகளுக்கும் இடையிலான தொடர்புகள் பின்வருமாறு:
- 1 அங்குலம் = 25.4 மில்லிமீட்டர்
- 1 அடி = 304.8 மில்லிமீட்டர்
- 1 யார் = 914.4 மில்லிமீட்டர்
- 1 மைல் = 1,609,300 மில்லிமீட்டர்
[தொகு] சில தர அளவுகள்
மில்லிமீட்டரில் தரப்பட்டுள்ள சில தர அளவுகள் வருமாறு:
- A4 தாள் அளவு - 297 x 210
- A3 தாள் அளவு - 420 x 297
- குறுவட்டு (CD) அளவு - விட்டம் = 120 மில்லிமீட்டர், தடிப்பு = 1.2 மில்லிமீட்டர், நடுத்துளை விட்டம் = 15 மில்லிமீட்டர்.
- சாதாரண செங்கல் அளவு = 225 x 112.5 x 75 மில்லிமீட்டர்.
[தொகு] அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்
- ↑ கீழ்வாய் அலகாக இது நூற்றன் மீட்டர் என்றும் அழைக்கப்படும்