பேச்சு:மின்கடத்தி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பஸ்பரமாக என்றால்?--ரவி 13:57, 5 ஜனவரி 2006 (UTC)
- பஸ்பரமாக என்றால்? Reciprocal. From a Tamil Dictionary. --Natkeeran 19:59, 5 ஜனவரி 2006 (UTC)
பஸ்பரமாக நான் கேள்விப்படாத சொல்லாக இருக்கிறது. தமிழாகவும் தெரியவில்லை. உங்களுக்கு உடன்பாடென்றால் தலைகீழாக என்ற சொல்லைப் பயன்படுத்தலாம்--ரவி 21:00, 5 ஜனவரி 2006 (UTC)
- Reciprocal என்பதற்கு மறுதலை என்ற சொல்லைத்தான் இலங்கைப் பாடப் புத்தகங்களில் பயன்படுத்துவது வழக்கம். பஸ்பரமாக என்ற சொல்லை நானும் கேள்விப்பட்டதில்லை. தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் கலைச்சொல் அகராதியில் பல சொற்கள் காணப்பட்டாலும், தலைகீழ் என்பதே அதிகமாகக் காணப்படுகிறது. Mayooranathan 07:29, 6 ஜனவரி 2006 (UTC)
சுந்தர் உங்களின் பொருள் விளக்கம் சரியே. பரஸ்பர உதவி என்ற ரீதியில் இச்சொல் உபயோகிக்கப்படுவதுண்டு. எனது உபயோகம் இங்கு பொருந்தவில்லை என்றே நினைக்கின்றேன். ரவியும், மயூரநாதனும் சுட்டியபடி தலைகீழாக என்ற சொல்லை பயன்படுத்தி கொள்கின்றேன். அவதானமாக கவனித்து பரிந்துரைகள் தந்ததுக்கு அனைவருக்கும் நன்றிகள். --Natkeeran 17:04, 6 ஜனவரி 2006 (UTC)
- mass = நிறை என்றே த.பா.க. ( தமிழ்நாடு பாடநூல் கழகம்.) நூல்கள் வழங்குகின்றன. அவ்வாறே இருந்தால் நன்றாக இருக்கும்.
- த.பா.க. நூல்களில் directly proportional = நேர்மாறாக, inversely proportional = எதிர்மாறாக. --Suresh jeevanandam 14:36, 6 ஏப்ரல் 2006 (UTC)
-
- directly proprotional = நேர் சார்பாக, inversely proportional = எதிர் சார்பாக. தா.பா.க சொற்கள் முற்றிலும் தவறானது!! நேர் விகிதமாக, எதிர் விகிதமாக என்றும் சொல்லலாம்.