மாநிலங்களவை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இந்திய பாராளுமன்றத்தின் மேலவை. 250 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 12 பேர் இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறர்கள். இவர்கள் கலை, இலக்கியம், அறிவியல் போன்ற அவரவர்களுக்குரிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களாக இருப்பர். இந்த 12 பேரைத் தவிர்த்த மற்றவர் மாநில சட்டசபை உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்படுவர்.
இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள். மேல்சபையின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூர்த்தியாகும். குடியரசுத் துணைத்தலைவர் இந்த அவையின் தலைவராக இருப்பார்.