மலையக மக்கள் முன்னணி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மலையக மக்கள் முன்னணி இலங்கையில் இயங்கிவரும் அரசியல் கட்சியும் தொழிற் சங்கமுமாகும். இது பொதுவாக இந்திய வம்சாவளி தழிழர்களை பிரதிநிதித்துவப் படுத்திவந்துள்ளது. 1986 ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரசில் ஏற்பட்ட தலைமைத்துவ சிக்கல் காரணமாக இ.தொ.கா.விலிருந்து விலகிய பெரியசாமி சந்திரசேகரன் மலையக மக்கள் முன்னணியை ஆரம்பித்தார்.[1] இது வரையிலும் அவரே அதன் தலைவராகவும் காணப்படுகிறார். இக்கட்சி ஏனைய மலையக கட்சிகளை விட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு நிலையையும் அதன் தலைமையுடன் நெருங்கிய தொடர்பையும் கொண்டுள்ளது.
1994 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஒரு பாராளுமன்ற ஆசனத்தையும் 2003 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 1 ஆசனத்தையும் தேசியபட்டியலில் 1 ஆசனத்தையும் வென்றது.