மனுஷி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மனுஷி | |
இயக்குனர் | ரூபன் |
---|---|
தயாரிப்பாளர் | நிர்வாணா கிரியேஷன்ஸ் |
கதை | சுமதி ரூபன் |
நடிப்பு | சுமதி ரூபன் சுரேஷ்குமார் |
ஒளிப்பதிவு | ரூபன் |
படத்தொகுப்பு | ரூபன் |
வினியோகம் | நிர்வாணா கிரியேஷன்ஸ் |
நாடு | கனடா |
மொழி | தமிழ் |
நிர்வாணா கிரியேஷன்ஸ் கனடாவில் தயாரித்த குறுந்திரைப்படம். சுமதி ரூபன், எழுதி, நடித்துள்ள இக்குறுந்திரைப்படத்தில், அவருடன் சுரேஷ்குமார் என்பவரும் நடித்துள்ளார். குடும்பத்தில் பெண்கள் சுமக்கும் சுமையில் பங்களிக்காத ஒரு சோம்பேறிக்கணவன் இக்குறுந்திரைப்படத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறார்.
இக்குறுந்திரைப்படத்தில் நடித்த சுமதி ரூபன், லண்டனில் நடந்த விம்பம் தமிழ்க் குறுந் திரைப்படவிழாவில் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்கம் ஆகிய பொறுப்புக்களை ரூபன் கவனித்துள்ளார்.