பொடுதலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பொடுதலை (Phyla nodiflora) ஒரு முலிகைச் செடியாகும். இது ஈரப்பாங்கான தரையுடன் ஒட்டிப் படர்ந்து வளர்கிறது. இதன் எல்லாப் பாகங்களுமே மருத்துவக் குணங்களுடையனவாகும்.
[தொகு] மருத்துவ பயன்கள்
- உடலுக்குக் குளிர்ச்சி தருகிறது
- உடல் எரிச்சலைத் தணிக்கிறது
- பசியின்மையைப் போக்குகிறது
- அபான வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும்
- வயிற்றுமந்தம், வயிற்றுவலி, சீரணக் கோளாறு, குடற்புழுக்களின் தொல்லை, சீதபேதி, வயிற்றுப்புண் ஆகியவற்றுக்கும் மருந்தாகும்.
- வெட்டை நோய், உள்மூலம் போன்ற பல பிற நோய்களுக்கான மருந்துகளிலும் சேர்க்கப்படுகிறது.