See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
பேச்சு:பிட்டொரென்ட் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

பேச்சு:பிட்டொரென்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

விக்கிப்பீடியர்களே, பிட்ரொரண்ட், பிட்ரொறண்ட் எது சரி. அல்லது இதைவிட சிறந்த தமிழ்ச் சொல் உள்ளதா?. நேரம் கிடைக்கும் போது பிட்ரொரண்ட் கிளையண்ட்டின் தமிழாக்கப் பணிகளை http://translate.bittorrent.com/projects/bittorrent ஊடாகச் செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன் --Umapathy 15:39, 11 ஜூலை 2006 (UTC)

[தொகு] bittorrent - தமிழ்

இதற்கான தமிழ் சொல்லை ஆக்குவதற்கு சில நாட்களுக்கு முன் முயன்றேன். விக்கிபீடியாவில் கட்டுரை உருவாக்குவதற்காகத்தான் தேடவேண்டியிருந்தது. உண்மையில் biட்டுக்களின் பெருவெள்ளம் என்பதுதான் இதன் அர்த்தம். முதலில் பிட் என்பதற்கு தமிழில் என்ன சொல்லை பாவிக்கலாம்? அப்படி ஒரு அடிச்சொ கிடைத்தால், அந்த சொல்லை பயன்படுத்தி பிட் புனல், பிட் பெயல் என்றவாறு மொழிபெயர்க்கலாம். உண்மையில் இதற்கான தமிழ் சொல் எமக்கு தேவை. பிட்டொரென்ட் என்பது சரியான ஒலிஎயர்ப்பாக இருக்கலாம் என நம்புகிறேன். --மு.மயூரன் 16:17, 11 ஜூலை 2006 (UTC)

BIT (DATA) - துகள் (தரவு) ; BIT RATE - துகள் வீதம் --Natkeeran 04:20, 12 ஜூலை 2006 (UTC)
Bit என ஈரெண் முறையாயின் இரும எண் முறை என்று கூறலாம். இருமம் எனில் bit என்றே கொள்லாளாம். Bit rate என்பதற்கு இருமங்கள் நகர் வீதம். அல்லது இருமங்களின் விரைசல். என்று கூறலாம். பதின்ம எண் முறை = decimal system. Octal எபதற்கு எண்மம் எனலாம் ஆனால் எண் என்னும் சொல் பல பொருள் கொண்டுள்ளதால், எட்டியம் என்று கூறலாம். மற்ற எண் முறைகளுக்கு எழுமம், அறுமம், ஐந்துமம், நான்மம் என.. Qubit என்பதற்கு கியூபிட் என்றோ குவாண்டமம் என்றோ கியூமம் என்றோ கூறலாம். மேலும் தமிழில் பிட்டு என்றாலும் ஆங்கில சொல் Bit ன் பொருளே வருவதால், பிட்டு என்றும் சொல்லலாம். இரும பிட்டு, பதின்ம பிட்டு, எட்டுவ பிட்டு, பதினாறும பிட்டு. எழும பிட்டு என்றெல்லாம் சொல்லலாம்.--C.R.Selvakumar 04:38, 12 ஜூலை 2006 (UTC)செல்வா

இருமவெள்ளம் என கூறலாமா? பிட்டுவெள்ளம் என்றும் கூறலாம்.--C.R.Selvakumar 04:43, 12 ஜூலை 2006 (UTC)செல்வா

இன்றுதான் கவனித்தேன் bittorrent என்பது பதிவு செய்யப்பட்ட, காப்புரிமை கொண்ட வர்த்தக பெயர். எனவே இதனை நாங்கள் தமிழ்ப்படுத்தி பொதுவில் பயன்படுத்த முடியாது என நினைக்கிறேன். ஆனால், bittorrent, p2p கோப்பு பகிர்வு முறையின் ஒரு உபதொடையே.இத்தகைய தரவிறக்க, கோப்பு பகிர்வு முறைகளை பொதுவில் குறிக்க நாம் ஒரு சொல்லை கண்டடையலாம். பகிர்விறக்கம் என்பது எனது பரிந்துரைப்பு. பகிர்விறக்க முறைகளுள் ஒன்றாக பிட்டொரென்ட் இனை நாம் வகைப்படுத்தலாம். பகிர்விறக்கம் செய்தல், பகிர்விறக்க வழங்கி, பகிர்விறக்கி போன்ற சொற்களை இந்த அடியிலிருந்து உருவாக்கி பயன்படுத்த முடியும். --மு.மயூரன் 20:01, 12 ஜூலை 2006 (UTC)--மு.மயூரன் 20:01, 12 ஜூலை 2006 (UTC)

வழக்கமாக வர்த்தகப்பெயர்களுக்கு நாங்கள் பின்பற்றும் வழக்கத்தை இக்கட்டுரைக்கும் பின்பற்றலாம். பிட்டொரென்ட் (bittorrent) என்றவாறு. --மு.மயூரன் 20:02, 12 ஜூலை 2006 (UTC)

[தொகு] Spam filter

இக் கட்டுரையைத் தொகுக்கும் பொழுது தடை ஏற்பட்டதால் torrentmania என்னும் வலையிடத்தை நீக்க வேண்டியிருந்தது. வேண்டும் என்றால் பின்னர் சேர்த்துக் கொள்ளலாம்.

[தொகு] பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:54, 14 மே 2007 (UTC)


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -