See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
படிவுப் பாறை - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

படிவுப் பாறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

படிவுப் பாறையின் இரு வகைகள்: லிமே ஷேல் ஐ மூடியுள்ள சுண்ணக்கல். கம்பர்லாந்துச் சமவெளி, தென்னசீ.
படிவுப் பாறையின் இரு வகைகள்: லிமே ஷேல் ஐ மூடியுள்ள சுண்ணக்கல். கம்பர்லாந்துச் சமவெளி, தென்னசீ.

படிவுப் பாறை (Sedimentary rock) என்பது முக்கியமான மூன்று பாறை வகைகளுள் ஒன்றாகும். தீப்பாறை, உருமாறிய பாறை என்பன ஏனைய இரண்டு வகைகளாகும். படிவுகளால் உருவான பாறைகள் நிலப்பரப்பின் 75-80% பகுதிகளை மூடியுள்ளன. சுண்ணக்கல், தொலொமைட்டு, மணற்கல் என்பன இவ்வகைப் பாறையுள் அடங்குவன.

படிவுப் பாறைகள் அவற்றை உருவாக்கிய படிவுகளின் மூலங்களையொட்டி வகைப்படுத்தப்படுகின்றன. இப் படிவுகளின் மூலங்கள் பின்வருவனவற்றில் ஒன்றாக இருக்கலாம்.

  • உடைவுப் பாறை (clastic rock): இப்பாறைகள் ஏற்கெனவே உள்ள பாறைகளில் இருந்து பின்வரும் முறைகளில் உடைந்து உருவாகின்றன.
    • இருந்த இடத்திலேயே தேய்வடைதல்.
    • நீர், காற்று முதலியவற்றால் அரிக்கப்பட்டு அவற்றுடன் தொங்கல் நிலையில் எடுத்துச் செல்லப்பட்டபின் வேறிடங்களில் படிதல்.
  • உயிரியச் (biogenic) செயற்பாடு
  • கரைசல்களிலிருந்து வீழ்படிதல்.

இப் படிவுகள் பின்னர் அழுத்தப்பட்டுப் பாறையாதல் (lithification) வழிமுறை மூலம் பாறைகளாக மாறுகின்றன.

[தொகு] உருவாக்கம்

படிவுப்பாறை அமைப்பு, கர்நாடகம், இந்தியா.

தொங்கல் நிலையில் படிவுத் துகள்களைக் கொண்டு செல்லும் காற்று, பனிக்கட்டி, நீரோட்டம் என்பவற்றிலிருந்து, அதிக சுமை அழுத்தம் காரணமாக விடுபடும் அத் துகள்கள் படிவதனால் படிவுப் பாறைகள் உருவாகின்றன. படிவுகள் தொடர்ச்சியாக இடம்பெறும்போது ஏற்படும் சுமை அழுத்தம், பாறையாதல் என்னும் வழிமுறைமூலம் இப் படிவுகளைப் பல படைகளாலான திண்மங்களாக உருவாக்குகின்றது.

படிந்தபின்னர், பாறையாதலில், பிணைப்பு உட்பட, படிவுத் துகள்கள் அடையக்கூடிய வேதியியல், இயற்பியல் மற்றும் உயிரியல் மாற்றங்கள் அனைத்தையும் ஒருசேர diagenesis என அழைப்பர். மேற்பரப்புச் சிதைவடைதல் இதில் அடங்குவதில்லை.

படிவுப் பாறைகள் படைகளாகவே உருவாகின்றன. ஒவ்வொரு படையும் முன்னைய படையின்மீது கிடைநிலையில் அமைகின்றது. இத் தொடர்ச் செயற்பாடுகளின்போது சில சமயங்களில் கால இடைவெளிகள் இருப்பது உண்டு. இவை படிவுகள் ஏதும் ஏற்படாத காலப்பகுதிகளைக் குறிக்கக்கூடும் அல்லது பழைய படிவுப் படைகள் கடல் மட்டத்துக்கு மேல் எழுந்து அரித்துச் செல்லப்பட்டிருக்கலாம்.

படிவுப் பாறைகள் புவியின் வரலாறு தொடர்பான பல தகவல்களைத் தம்முள் அடக்கியிருக்கின்றன. இவை பண்டைக்காலத் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளான தொல்லுயிர்ப் படிவங்களைக் கொண்டுள்ளன. நிலக்கரியும் ஒருவகைப் படிவுப் பாறையாகக் கருதப்படுகிறது. படிவுகளின் சேர்மானங்கள், மூலப் பாறையின் தன்மைகள் பற்றிய தகவல்களைப் பெற உதவுகின்றன. அடுத்தடுத்த படைகளிடையே காணப்படும் வேறுபாடுகள், அக்காலங்களில் சூழலில் ஏற்பட்ட மாற்றங்களைக் குறிக்கின்றன. தொல்லுயிர் எச்சங்கள் அழிந்துபோகாத அளவிலான வெப்பநிலை மற்றும் அமுக்கங்களில் படிவுப்பாறைகள் உருவாவதால் அவை தொல்லியிர்ப் படிவங்களைப் பாதுகாத்து வைத்திருக்கக்கூடியதாக உள்ளது.

படிவுப் பாறைகள் பெருமளவு புவி மேற்பரப்பை மூடியிருந்தாலும், மொத்தப் பாறைகளின் அளவில் இவ் வகைப் பாறைகள் 5% அளவுக்கே உள்ளன. இது, படிவுச் செயற்பாடுகள் புவியோட்டின் மிகவும் தடிப்புக் குறைந்த மேற்பரப்பிலுள்ள படையாகவே இருப்பதைக் குறிக்கின்றது. புவியோட்டின் பெரும்பகுதி தீப்பாறைகளாகவோ அல்லது உருமாறிய பாறைகளாகவோ உள்ளது.

[தொகு] வகைப்பாடு

படிவுப் பாறைகள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை,

  1. உடைவுப் பாறைகள் (clastic)
  2. வேதியியற் படிவுகள் (chemical precipitate)
  3. உயிர்வேதியியல் அல்லது உயிரியப் (biogenic) படிவுப் பாறைகள்

என்பனவாம்.


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -