திசு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
திசு (Tissue (biology)) (அல்லது இழையம்) என்பது, ஒரு உயிர்ச் செயலை புரியும் ஒத்த பண்புகளுடைய திசுள்களின் கூட்டமைப்பு ஆகும். திசுக்களைப் பற்றி ஆராயும் துறை திசுவியல் ஆகும்.
திசுக்களை ஆராய மெழுகுக்கட்டிகள், நுண்ணோக்கிகள், திசுச்சாயங்கள் போன்றவை காலங்காலமாகப் பயன்பட்டு வருகின்றன.அண்மைய தொழில்நுட்ப முன்னேற்றங்களான மின்னணு நுண்ணோக்கி,தடுப்பாற்று-உறிஞ்சியொளி வீசல்,உறை பகுப்புகள் திசுவியல் ஆராய்ச்சிகளை வேகப்படுத்தவும் எளிமைப்படுத்தவும் உதவியுள்ளன. இக்கருவிகளையும் நுட்பங்களையும் கொண்டு, திசுக்களைத் தாக்க வல்ல நோய்களைக் கண்டறியவும் முன் கூட்டியே கணிக்கவும் இயலும்.
[தொகு] மனிதத் திசு வகைகள்
மனித உடலில் நான்கு அடிப்படைத் திசு வகைகள் உள்ளன.இவை எல்லா உறுப்புகளையும் உள்ளடக்கியவை ஆகும்.
- புறத்தோலியம் - உட்புற மற்றும் வெளிப்புற உடற்பாகங்களை முடும் புறச்சவ்வு..
- இணைப்புத் திசு - உடற்பாகங்களை இணைக்கும் திசு.(எ.கா).,இரத்தம் ஓர் இணைப்புத்திசுவாகக் கருதப்படுகிறது.
- தசைத் திசு
- நரம்புத் திசு - மூளை, தண்டு வடம் மற்றும் புற நரம்பு மண்டலத்தை உருவாக்கும் திசுக்கள்
[தொகு] தாவரத் திசு வகைகள்
தாவரத்திசுக்கள்,புடைக்கலவிழையம், ஒட்டுக்கலவிழையம் மற்றும் வல்லருகுக்கலவிழையம் என மூன்று வகைப்படும்.(எ.கா).,காழ், உரியம் போன்ற கலனிழையங்கள்.
[தொகு] அருஞ்சொற்பொருள்
- இணைப்புத் திசு - Connective tissue
- இழையம் - திசு
- உரியம் - Phloem
- உயிர்ச் செயல் - Biological function
- உறை பகுப்புகள் - Frozen sections
- ஒட்டுக்கலவிழையம் - Collenchyma
- காழ் - Xylem
- கலனிழையம் - Vasculatr tissue
- பலத் திசுள் - Multicellular
- புடைக்கலவிழையம் - Parenchyma
- புற நரம்பு மண்டலம் - Peripheral nervous system
- புறத்தோலியம் - Epithelium
- தண்டு வடம் - Spinal cord
- தடுப்பாற்று-உறிஞ்சியொளி வீசல் - Immuno fluorescence
- திசு - Tissue (biology)
- திசுவியல் - Histology, Histopathology (Medicine)
- திசுள் - Cell (biology)
- திசுச்சாயங்கள் - Tissue stains
- நோய்களைக் கண்டறியவும் முன் கூட்டியே கணிக்கவும் - Diagnosis and Prognosis of diseases
- நுண்ணோக்கிகள் - Microscope
- மின்னணு நுண்ணோக்கி - Electron microscope
- மெழுகுக்கட்டிகள் - Wax block
- வல்லருகுக்கலவிழையம் - Sclerenchyma