See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
டர்போ சி++ - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

டர்போ சி++

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

  ரோபோ சி++ அல்லது டர்போ சி++

முதல் முதலாக வெளிவந்த டர்போ சி++ இன் திரைக்காட்சி
பராமரிப்பாளர்: போர்லாண்ட்
பிந்திய பதிப்பு: 2006 / 5 செப்டம்பர், 2006
இயங்கு தளம்: மைக்ரோசாப்ட் விண்டோஸ்
வகை: ஒருங்கிணைந்த விருத்திச் சூழல்
உரிமை: இலவச மென்பொருள்e (Explorer)
Proprietary (Professional)
டர்போ எக்ஸ்புளோளர்


டர்போ சி++ போர்லாண்ட் சி++ கம்பைலரும் ஒருங்கிணைக்கப் பட்ட விருத்திச் சூழலுமாகும். இந்தத் தொடர் 1991 இல் இருந்து 1994 வரை தொடர்ச்சியாக வெளிவந்தது பின்னர் நீண்ட இடைவேளைக்குப் பின்னர் ஓர் அடிப்படை விருத்திச் சூழலாக டர்போ சி++ 2006 5 செப்டம்பர் 2006 மீள் அறிமுகப்படுத்தப் பட்டது. இதில் எக்ஸ்புளோளர் என்கின்ற இலவமாகப் பதிவிறக்கிப் பாவிக்கக்கூடிய பதிப்பினையின் வணிகரீதியிலான புரொபெஷனல் பதிப்பு என்று இருவேறான பதிப்புக்களாக வெளிவந்தது. புரொபெஷனல் பதிப்பு இப்பொழுது விற்பனையில் இல்லை.

[தொகு] வரலாற்றுப் பதிப்புக்கள்

இதன் முதலாவது மைக்ரோசாப்ட் டாஸ் இயங்குதளம் கணினி உலகை ஆட்டிப் படைத்த காலத்தில் வெளிவந்தது. முதலாவது பதிப்பு ஓஎஸ்/2 இயங்குதளத்திற்காக 1.0 எனவெளிவந்தது. 1.01 பதிப்பானது 28 பெப்ரவரி 1991 மைக்ரோசாப்ட் டாஸ் இயங்குதளத்தை ஆதரிக்கும் வகையில் வெளிவந்தது. [1] டாஸ் இயங்குதளத்தில் இயங்கும் டர்போ சி++ மிகவேகமாக நிரல்களைக் கம்பைல் பண்ணி லிங்கருடன் இணைந்து டாஸ்/விண்டோஸ் இயங்குதளத்தில் தனித்தியங்கும் *.exe மற்றும் *.com கோப்புக்களை உருவாக்கும். இது இண்டெல் x86 புரோசர்களுக்கான டர்போ அசம்பிளருடன் இணைத்து விநியோகிக்கப்பட்டது. இந்தக் கம்பைலர் அமெரிக்க பெல் ஆய்வுகூடத்தில் C++ இல் இரண்டாவது பதிப்பினை ஆதரிக்கின்றது.

டர்போ சி++ 3.0 20 நவம்பர் 1991 இல் விண்டோஸ் பணிச்சூழலுக்கான வெளிவந்தது. இதில் டெம்லேட்டுக்களை ஆதரிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதில் மைக்ரோசாப்ட் டாஸ் இயங்குதளத்தில் 8086 286 செயலிகளுக்கான ஆதரவுடன் உருவாக்கப்பட்டது.

டர்போ சி++ 3.0 வெளிவந்ததும் மைக்ரோசாப்ட் பணிச்சூழலுக்கான சி++ உருவாக்குவதில் போர்லாண்ட் முயன்றது. விண்டோஸ் பணிச்சூழலுக்கான டர்போ சி++ 3.0 ஐத் தொடர்ந்து டர்போ சி++ 3.1 அதைத் தொடர்ந்து டர்போ சி++ 4.5 உம் வெளிவந்தது. இந்தப் பதிப்பின் 1 இல் இருந்து 3 இற்குப் பாய்ந்ததானது விண்டோஸ் பதிப்புக்களுடன் ஒப்பிடுவதாக அமைந்தாலும் 1989 இல் வெளிவந்த டர்போ சி 1990 இல் வெளிவந்த டர்போ சி++ இவை இரண்டும் ஒருங்கிணைந்த டர்போ சி++ 3 என்றவாறும் கருதலாம்.

3 ஆம் பதிப்பில் இருந்து போர்லாண்ட் இரண்டு பதிப்புக்களாக சி++ ஐ வெளிவிட்டது ஒன்று டர்போ சி++ மற்றையது போர்லாண்ட் சி++. டர்போ சி++ ஆரம்ப நிலை நிரலாக்கருக்கும் பொழுதுபோக்காக நிரலாக்கத்தில் ஈடுபடுபவர்களுக்கும் என உருவாக்கப்பட்டது. போர்லாண்ட் சி++ நிரலாகத்தைத் தொழிலாகக் கொண்டு மென்பொருட்களை விருத்தி செய்பவர்களை இலக்கு வைத்து வெளிவந்தது. போர்லாண்ட் சி++ டர்போ சி++ இற்கு மேலதிகாமாக கம்பைலர் ஊடாக நிரலாக்கம் வினைத்திறனாகியது மற்றும் வர்தகரீதியான விருத்தியாளர்களை இலக்கு வைத்து ஆவணப்படுத்தும் வசதிகளையும் உள்ளடக்கியிருந்தது. டர்போ சி++ பதிப்பை டர்போ அசம்பிளர், டர்போ விஷன் 1.0 போன்ற் பொருத்துக்கள் மூலம் மேம்படுத்த இயலும்

இது போர்லாண்ட் நிறுவனத்தினரின் டர்போ பாஸ்கல், டர்போ பேசிக், ரேபோ சி பணிச்சூழலுடன் ஒத்ததாகும். டர்போ சி++ டர்போ சியின் வழிவந்ததாகும். டர்போ பாஸ்கலைப் போலவே Object Oriented Programming ஐ ஆதரிக்கின்றதெனினும் இது சர்வதேச நியமங்களை பின்பற்றியே உருவாக்கப்பட்டதாகும்.

[தொகு] பதிவிறக்கம்

  • ரேபோ சி++ இலவசப் பதிப்பு போர்லாண்ட் இணையத்தளத்தில் (ஆங்கிலத்தில்)
  • ரேபோ சி++ இலவச ஒருங்கிணைக்கப்பட்ட விருத்திச் சூழல் மீள் பொதிசெய்யப்பட்டது நிறுவல் அவசியம் இல்லை.

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

ஏனைய மொழிகள்


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -