பேச்சு:ஜிம்மி வேல்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
படிமப் பேச்சு:Sundar and Jimbo.jpg பக்கத்தில் சுந்தரே குறிப்பிட்டுள்ளது போல், இக்கட்டுரையில் ஜிம்மி வேல்ஸ் தனியாக உள்ள நிழற்படம் இடம்பெறுவது தான் பொருத்தமாக இருக்கும். எவருக்கும் ஆட்சேபணையில்லை என்றால் நானே மாற்றி விடுகிறேன்--ரவி 22:23, 5 அக்டோபர் 2006 (UTC)
- ஆம். நீக்கிவிடுவதுதான் சரி. இது ஒரு தவறான முற்காட்டுதலாகிவிடக் கூடாது. கூடுமானவரை தனிப்பட்ட பயனர்களைப் பற்றிய தகவல்கள் கட்டுரைப் பெயர்வெளியில் வருதலைத் தவிர்க்க வேண்டும் (கட்டுரைகளில் இடம்பெறத்தக்க அளவு முக்கிய தகவலாயில்லாதபோது). படிமத்தை இக்கட்டுரையிலிருந்து நீக்கிவிடுகிறேன். (உமாபதி, தவறாகக் கொள்ள வேண்டாம்.) ரவி, நேரமிருக்கும்பொழுது இந்தப் படத்தை காமன்சில் பதிவேற்றி இக்கட்டுரையில் இணைத்து விடுங்கள். இந்தப் படமும் பொருந்தும். -- Sundar \பேச்சு 05:56, 6 அக்டோபர் 2006 (UTC)