சில்லி தீவுகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சில்லி தீவுகள் Isles of Scilly |
|
---|---|
கோர்ன்வால் சார்பாகக் காட்டப்பட்டுள்ளது |
|
புவியியல் | |
நிலை: | Unitary Authority |
பகுதி: | தென் மேற்கு இங்கிலாந்து |
Ceremonial County: | கோர்ன்வால் |
பரப்பளவு: - மொத்தம் |
16.33 கிமீ² |
தலைமையகம்: | சென் மேரீஸ் |
ONS code: | 15UH |
குடிமதிப்பியல் | |
மக்கள்தொகை: - மொத்தம் (2006 மதிப்பீடு) - அடர்த்தி |
350வது தரம் 2,100 129/கிமீ² |
இனக்குழு: | 99.6% வெள்ளையர் |
அரசியல் | |
சில்லி தீவுகளின் ஆலோசனைக் குழுக்கள் http://www.scilly.gov.uk/ |
|
தலைவர்: | கிறிஸ்டீன் சவில் |
செயல்படுத்துநர்: | பிலிப் ஹைகேட்டு |
நாடாளுமன்ற உறுப்பினர்: | ஆன்ட்ரூ ஜோர்ஜ் |
சில்லி தீவுகள் (Isles of Scilly) பெரிய பிரித்தானியாவில் தென்மேற்கில் அமைந்துள்ள ஒரு தீவுக் குழுமம் ஆகும். இங்கிலாந்தின் கோர்ன்வால் கவுண்டியின் நேரடி ஆட்சியில் இத்தீவுகள் இருந்து வந்தன. தற்போது இவை தமக்கென ஒரு ஆலோசனைக் குழுவை (council) அமைத்துள்ளன. இத்தீவுகளில் வாழும் மக்கள் சில்லியர்கள் என அழைக்கப்படுகின்றனர்.
[தொகு] புவியியல்
சில்லி தீவுகள் இங்கிலாந்தின் மேற்குப் பக்கத்தில் அமைந்துள்ளன. இவற்றில் மொத்தம் ஆறு தீவுகளும் 140 சிறிய தீவுப் பாறைகளும் 45 கிமீ (28 மைல்கள்) தூரத்தில் உள்ளன.
இத்தீவுக்குழமத்தில் உள்ள முக்கிய தீவுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
தீவு | மக்கள்தொகை (2001 மதிப்பீடு) |
பரப்பளவு கிமீ² |
முக்கிய குடியேற்றம் |
---|---|---|---|
சென் மேரீஸ் | 1,666 | 6.29 | ஹியூ நகர் |
டிரெஸ்கோ | 180 | 2.97 | நியூ கிரிம்ஸ்பி |
சென் மார்ட்டின்ஸ் (வைட் தீவு உடன்) | 142 | 2.37 | ஹயர் நகர் |
சென் அக்னஸ் | 70 | 1.48 | சென் அக்னஸ் |
Gugh | 3 | ||
பிறைஹர் (குவீல் உடன்) | 92 | 1.32 | பிறைஹர் |
சாம்சன் | -(1) | 0.38 | |
அன்னெட் | - | 0.21 | |
சென் ஹெலென்ஸ் | - | 0.20 | |
டெயான் | - | 0.16 | |
பெரிய கனிலி | - | 0.13 | |
மீதியான 45 சிறு தீவுகள் | - | 0.50 | |
சில்லி தீவுகள் | 2,153 | 16.03 | ஹியூ நகர் |
(1) 1855 வரை மக்களிருந்தனர்.