சரோஜினி நாயுடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சரோஜினி நாயுடு (பிப்ரவரி 13, 1879 - மார்ச் 2, 1949) இந்திய விடுதலைக்கு போரிட்ட ஒரு வீராங்கனை ஆவார். இவர் சிறந்த கவிஞராகவும் விளங்கியவர். கவிக்குயில் என்று அழைக்கப்பட்டவர். இவரே இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவர் ஆகவும் இந்தியாவின் முதல் பெண் ஆளுனர் ஆகவும் விளங்கினார்.