கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சதாசிவ ராயன் விஜயநகரப் பேரரசை ஆட்சி செய்த ஒரு அரசனாவான். இவன், அரசனாக இருந்த அச்சுத தேவ ராயன் 1543 ஆம் ஆண்டில் இறந்ததைத் தொடர்ந்து முடிசூட்டப்பட்டான். கிருஷ்ணதேவராயனின் மருமகனான அலிய ராமராயனின் வலுவான ஆதரவினாலேயே சிறுவனாக இருந்த சதாசிவ ராயன் அரசனாக முடிந்தது. எனினும், ராம ராயன் தானே பதில் ஆளுனர் (Regent) ஆகி அரச நிர்வாகத்தை நடத்தி வந்தான். சதாசிவராயன் பராயம் அடைந்த பின்னரும், அவனை ஆட்சி செய்ய விடாமல் ஒரு சிறைக் கைதி போலவே ராம ராயன் நடத்தினான். சதாசிவ ராயனது ஆட்சிக் காலம் முழுவதும் அலிய ராம ராயனே அரசன் போல் செயல்பட்டு வந்தான்.