See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
கோதுமையும் களைகளும் உவமை - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

கோதுமையும் களைகளும் உவமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

கோதுமையும் களைகளும்
கோதுமையும் களைகளும்

கோதுமையும் களைகளும் இயேசு தனது போதனைகளின் போது கூறிய உவமான கதையாகும். இதில் உலகின் கடைசி நாள் பற்றி இயேசு கூறுகின்றார். இது மத்தேயு 13:24-30 இல் காணப்படுகிறது. இது பூமியில் உள்ள பாவ வழியில் செல்வோர் மீது கடவுள் காட்டும் பொருமையை விளக்குகிறது.

பொருளடக்கம்

[தொகு] உவமை

பண்ணையாளர் ஒருவர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார். அவருடைய பணியாள்கள் தூங்கும்போது அவருடைய பகைவன் வந்து கோதுமைகளுக்கிடையே களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான். பயிர் வளர்ந்து கதிர் விட்டபோது களைகளும் காணப்பட்டன. பண்ணையாளரின் பணியாளர்கள் அவரிடம் வந்து," ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதைகளை அல்லவா விதைத்தீர்? அதில் களைகள் காணப்படுவது எப்படி? என்று கேட்டார்கள். அதற்கு அவர்," இது பகைவனுடைய வேலை" என்றார். உடனே பணியாளர்கள் அவரிடம்," நாங்கள் போய் அவற்றைப் பறித்துக் கொண்டு வரலாமா? உம் விருப்பம் என்ன?"என்று கேட்டார்கள். அவர்,"வேண்டாம், களைகளைப் பறிக்கும்போது அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கி விடக்கூடும். அறுவடைவரை இரண்டையும் வளர விடுங்கள். அறுவடை நேரத்தில் அறுவடை செய்வோரிடம்," முதலில் களைகளைப் பறித்துக் கொண்டு வந்து எரிப்பதற்கெனக் கட்டுகளாகக் கட்டுங்கள். கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள்" என்று கூறுவேன்" என்றார்.

[தொகு] பொருள்

இங்கு பண்ணையாளர் இயேசுவாகும் பணியாளர் தேவதூதர் ஆவர். கோதுமை நீதிமான்கள் களைகள் பாவிகளையும் குறிக்கிறது. இது உலகின் முடிவில் நடக்க இருக்கும் நீதிமான்களை பாவிகளிடமிருந்து பிரிக்கும் நிகழ்வை விளக்குகிறது. இங்கு களைகளும் இறுதி நாள் வரை விடப்படுகிறது இதன் மூலம் கடவுள் பாவிகளுக்கு இறுதிநாள் வரை மனம் மாற சந்தர்ப்பத்தை கடவுள் கொடுத்துள்ளார் என்பதை குறிக்கிறது.

மேலும் இது தனி மனித நோக்கில் பண்ணை ஒரு மனிதனின் இதயத்துக்கும் கோதுமை நல்லெண்ணங்களுக்கும் களைகளை தீய எண்ணத்துக்கும் ஒப்பிடலாம். மேலும் இங் பகைவன் எனப்படுவது அலகையை குறிக்கும்.

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

இயேசுவின் உவமைகள் - தொகு
கனிகொடா அத்திமரம் | வலை | இரவில் வந்த நண்பன் | நல்ல சமாரியன் | நல்ல ஆயன் | வளரும் விதை | புதையல் | திராட்சை தோட்ட வேலையாட்கள்  | புளித்த மா | காணாமல் போன காசு | காணாமல் போன ஆடு | மன்னர் மகனின் திருமணம் | கடுகுவிதை | முத்து | பரிசேயனும் பாவியும் | தாலந்துகள் உவமை | ஊதாரி மைந்தன் | மூட செல்வந்தன் | செல்வந்தனும் இலாசரசும் | நேர்மையான பணியாள் | செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் | விதைப்பவனும் விதையும் | கோதுமையும் களைகளும் | பத்து கன்னியர் | இரண்டு கடன்காரர் | இரண்டு மகன்கள் | நேர்மையற்ற நடுவர் | நீதியற்ற வீட்டுப் பொறுப்பாளர் | இரக்கமற்ற பணியாளன் | திராட்சை செடி | பொல்லாத குத்தகையாளர் | வீடு கட்டிய இருவர் |கிழிந்த ஆடையும் பழந்துருத்தியும்

[தொகு] உசாத்துணை

[தொகு] வெளியிணைப்பு

தமிழ் கிறிஸ்தவ சபை

ஏனைய மொழிகள்


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -