கோசம்பரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கோசம்பரி என்னும் உணவு வகை தமிழ்நாடு, கேரளம் மற்றும் கர்நாடகாவில் சில சமூகங்களில் உண்ணப்படுகிறது. தமிழ்நாட்டில் திருமணம் மற்றும் இராம நவமி போன்ற பண்டிகைகளில் மற்ற உணவு வகையுடன் உண்ணப்படுகிறது. இது போன்ற உணவு வகையை மேற்கத்திய நாடுகளில் சாலட் (salad) என அழைக்கப்படுகிறது.
பொருளடக்கம் |
[தொகு] வகைகள்
- வெள்ளரிக்காய் கோசம்பரி
- முட்டைகோசு கோசம்பரி
[தொகு] செய்முறை
உணவளவு
- இரண்டு நபர்களுக்காக.
தேவையான பொருட்கள்
- பாசிப்பருப்பு/கடலைப்பருப்பு - 1 கிண்ணம்
- துறுவிய வெள்ளரிக்காய்/கேரட்டு/மாங்காய் - 1 கிண்ணம்
- துறுவிய தேங்காய் - 1/2 கிண்ணம்
- உப்பு - 1 சிட்டிகை அல்லது தேவையான அளவு
- துண்டாக்கப்பட்ட பச்சை மிளகாய் - 1
- துண்டாக்கப்பட்ட கொத்துமல்லித் தழை - சிறிதளவு
- துண்டாக்கப்பட்ட கறிவேப்பிலை - சிறிதளவு
- எலுமிச்சம் பழச்சாறு - 1/2 பழம்
- ஆலிவ்/சூரியகாந்தி எண்ணை - 1 தேக்கரண்டி
- கடுகு
- பாசிப்பருப்பை நீரில் 2-ல் இருந்து 4 மணி நேரம் ஊற வைக்கவும். துரிதமாக உற வைக்க மிதமான சூட்டிலுள்ள நீரைப் பயன்படுத்தவும்.
- ஊறிய பருப்பை அலசி பிறகு வெள்ளரிக்காய், தேங்காய், பச்சை மிளகாய், கொத்துமல்லி, கறிவேப்பிலை, உப்பு மற்றும் எலுமிச்சைச் சாறையும் கலந்து விடவும்.
- ஆலிவ் எண்ணையை காய்ச்சி அதில் கடுகை வெடிக்க வைத்துப் பின் கோசம்பரியில் கலக்கவும்.
- பருப்பிற்கு பதிலாக முட்டைக்கோசை பயன்படுத்தலாம். வெள்ளரிக்காய்க்கு பதிலாக குடைமிளகாய் போன்ற காய்களையும் பயன்படுத்தலாம்.
[தொகு] பரிமாறும் முறைகள்
- தமிழகத்தில் வாழை இலையின் வலது மேற்புறத்தில் வடை மற்றும் காய்கறிகளுக்கு மத்தியில் பரிமாறப்படுகிறது.