கூழ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கூழ், இலங்கையில் மற்றும் இந்தியாவின் வெப்பம் நிறைந்த பகுதிகளில் அதிக அளவில் உண்ணப்படும் ஒரு உணவாகும். ஒடியல், கேழ்வரகு, கம்பு போன்றவற்றை அரைத்து தயிர் சேர்த்துத் தயாரிக்கப்படும் கூழ்ம நிலையிலுள்ள உணவு இது. கூடுதலான அளவு நீர் சேர்வதாலும், குறைந்த செலவில் கூடுதல் அளவில் உணவு தயாரிக்க முடியும் என்பதாலும் வேளாண் விவசாயிகள் மற்றும் வெயிலில் நெடுநேரம் வேலை செய்ய வேண்டியுள்ள தொழிலாளிகள் இவ்வுணவை விரும்பி உண்கின்றனர். அண்மைக் காலங்களில் உடல்நலம் கருதி பல்வேறு பிரிவு மக்களும் இவ்வுணவை உண்ணத் துவங்கியுள்ளனர். யாழ்ப்பாணம் இலங்கையில் கூழ் தயாரிப்பிற்கு பெயர் போன இடமாகும்.