Web - Amazon

We provide Linux to the World

ON AMAZON:


We support WINRAR [What is this] - [Download .exe file(s) for Windows]

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
SITEMAP
Audiobooks by Valerio Di Stefano: Single Download - Complete Download [TAR] [WIM] [ZIP] [RAR] - Alphabetical Download  [TAR] [WIM] [ZIP] [RAR] - Download Instructions

Make a donation: IBAN: IT36M0708677020000000008016 - BIC/SWIFT:  ICRAITRRU60 - VALERIO DI STEFANO or
Privacy Policy Cookie Policy Terms and Conditions
கூடைப்பந்தாட்டம் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

கூடைப்பந்தாட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

கூடைப்பந்து ஆட்டம்
கூடைப்பந்து ஆட்டம்

கூடைப்பந்தாட்டம் (Basketball) சுமார் 200 நாடுகளில் ஆர்வத்துடன் விளையாடப்படுகிறது. இது மிக வேகமான, சில வினாடிகளுக்குள் ஆடுகளத்தின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு சென்று திரும்பக்கூடிய ஆட்டம்.

ஒரு அணிக்கு ஐந்து பேர் வீதம் களத்தில் இருப்பார்கள். அணியின் மொத்த பலமான பத்து முதல் 12 பேர்களில் இருந்து எப்பொழுது வேண்டுமானாலும் களத்தில் ஆடும் ஒருவரை வெளியில் அழைத்து, பதிலியாக மற்றொருவரை உள்ளே அனுப்பலாம். பந்தை கையால் எறிந்து எதிரணியினரின் கூடையில் விழ வைப்பதே நோக்கம். வெற்றி, தோல்வி பெரும்பாலும் கடைசி வினாடிகளில் தான் முடிவாகும்.

பொருளடக்கம்

[தொகு] ஆடுகளம்

பந்தை கையால் தரையில் தட்டிக் கொண்டே ஓடும் பொழுது, பந்து எழும்புவதற்கு ஏதுவான கடினமான, சமமான தரை. நீளம் 28 மீட்டர், அகலம் 15 மீட்டர்.

களத்தின் இருமுனையிலும் தரையிலிருந்து 3.05 மீட்டர் உயரத்தில் ஒரு கூடை தொங்கும். கூடை என்பது 45 செண்டிமீட்டர் விட்டமுள்ள இரும்பு வளையமும், அந்த வளையத்திலிருந்து வட்டமான தொங்கும், அடிப்பாகம் திறந்த, கயிற்று வலையும் கொண்டதாகும்.

[தொகு] தந்திரோபாயம்

கூடைப்ந்தாட்டம் மிக வேகமான விளையாட்டாகும் . ஆதலால் அணிக்குள் மிகவும் ஒற்றுமை நிலவவேண்டும். பொதுவாக அணியை ஒரு பயிற்றுவிப்பாளர் பயிற்றுவிப்பார். இவரே அணியின் தந்திரோபாயங்களை முடிவு செய்வார். அணியிடம் பந்து இருக்கும்போது பந்தை கூடைக்குள் போடுவதும், எதிரணியிடம் பந்து இருக்கும்போது பந்து கூடைக்குள் விழாமல் தடுப்பது அல்லது பந்து மீதான கட்டுப்பாடை இழக்கச்செய்வதும் முக்கியமான செயற்பாடுக்ளாகும்.

[தொகு] ஆட்ட விதிகள்

பந்தை எதிரணியின் கூடையில் எறிந்து விழ வைத்தால் அந்த அணிக்கு இரண்டு புள்ளிகள் கிடைக்கும். கூடைக்கு முன்பு தரையில் வரைந்துள்ள அரை வட்டத்திற்கு வெளியே இருந்தவாறே கூடையில் பந்தை எறிந்து விழ வைத்தால் மூன்று புள்ளிகள் அளிக்கப்படும். அரை வட்டத்திற்கு உட்பக்கத்தில் ஒரு வட்டம் வரையப்பட்டு நடுவில் தடையில்லா எறிதலுக்காக கோடு போடப்பட்டிருக்கும். தங்கள் கூடையில் பந்தை விழாமல் தடுக்கும் போது தப்பாட்டம் (Foul Play) ஆடினால் எதிரணியினர் இந்த கோட்டில் நின்று தடையில்லாமல் கூடையை நோக்கி பந்தை எறிய (Free throw) வாய்ப்பு வழங்கப்படும். இவ்வாறு எறிந்து கூடையில் விழும் பொழுது ஒரு புள்ளி வழங்கப்படும்.

வீரர்கள், எதிரணியின் முனைக்கும், அவர்களது 'தடையில்லா எறிதல்' (Free-throw line) கோட்டிற்கும் இடையே மூன்று வினாடிகளுக்கு மேல் நிற்கக் கூடாது. எந்த வீரரும் ஐந்து வினாடிகளுக்கு மேல் பந்தைக் கையில் பிடிக்கக் கூடாது. தங்களது முனையில் பந்து கையில் கிடைத்தால் பத்து வினாடிகளுக்குள் அவர்கள் முன் பகுதிக்கு பந்தை எடுத்துச் செல்ல வேண்டும்.

சில போட்டிகளில் 30 வினாடிகளுக்குள் பந்தை தன் வசம் வைத்திருக்கும் அணி, எதிரணியின் கூடையில் பந்தை விழ வைக்க முயற்சிக்க வேண்டும் என்ற விதியும் சேர்க்கப்படுவதுண்டு.

[தொகு] கூடைப்பந்து நிலைகள்

 பா    தொ கூடைப்பந்து நிலைகள்
பின்காவல்கள் பாதி கூடைப்பந்து தரை 1. பந்துகையாளி பின்காவல் இரட்டை பின்காவல் (PG/SG)
2. புள்ளிபெற்ற பின்காவல் அசையாளர் (SG/SF)
முன்நிலைகள் 3. சிறு முன்நிலை
4. வலிய முன்நிலை பந்துகையாளி முன்நிலை (PG/PF)
நடு நிலை 5. நடு நிலை முன்-நடு நிலை (PF/C)

கூடைப்பந்தில் பொதுவாக இந்த ஐந்து நிலைகளை பயன்படுத்துவார்கள்.

  1. பந்துகையாளி பின்காவல் (Point guard, PG): ஐந்து நிலைகளில் பொதுவாக இவர்கள் மிகவும் குள்ளம், மிகவும் விரைந்து செல்லமுடியும். மற்ற ஆட்டக்காரர்களுக்கும் இலகுவாக்கருது இவர்களின் பொறுப்பு. பொதுவாக இவர்களின் உயரம் 1.77 மீட்டர் முதல் 1.95 மீட்டர் வரை ஆகும்.
  2. புள்ளிபெற்ற பின்காவல் (Shooting guard, SG): தொலைவெட்டிலிருந்து புள்ளிகளை பெற்றது இவர்களின் பொறுப்பு. பலமுறையாக இவர்கள் தன் அணியில் மிக உயர்ந்த மூன்று புள்ளி கூடைகளை எறியவர்கள் ஆவார். பொதுவாக இவர்களின் உயரம் 1.88 மீட்டர் முதல் 2.06 மீட்டர் வரை ஆகும்.
  3. சிறு முன்நிலை (Small forward, SF): இவர்கள் கூடைக்குக் கிட்டயும் கூடைக்கு தள்ளியும் விளையாடமுடியும். இவர்கள் கூடைக்குக் கிட்டயும் கூடைக்கு தள்ளியும் விளையாடமுடியும். இவர்களுக்கு பொதுவாக தள்ளி இருந்து பந்தை எறியமுடியும், கட்டைப்பந்துகளை (Rebound) பெற்றமுடியும். பொதுவாக இவர்களின் உயரம் 1.96 மீட்டர் முதல் 2.08 மீட்டர் வரை ஆகும்.
  4. வலிய முன்நிலை (Power forward, PF): இவர்கள் பொதுவாக கூடைக்கு கிட்ட விளையாடுவர்கள். இவர்களின் பொறுப்பு கம்பத்தில் (Post) புள்ளிகளை பெற்றதும் கட்டைப்பந்துகளை பெற்றதும். சில வலிய முன்நிலை ஆட்டக்காரர்களுக்கு கூடைக்கு தள்ளியிருந்து புள்ளிகளை அடைக்கமுடியும். பொதுவாக இவர்களின் உயரம் 2.03 மீட்டர் முதல் 2.15 மீட்டர் வரை ஆகும்.
  5. நடு நிலை (Center, C): ஐந்து நிலைகளில் பொதுவாக மிகவும் உயரம், மிகவும் வலியமாக நடு நிலைகள் ஆவார். இவர்களின் சில பொறுப்புகள் கூடைக்கு கிட்ட புள்ளிகள் அடை செய்யரது, எதிர் அணியில் ஆட்டக்காரர்களின் எறியல்களை தள்ளுபடி செய்யரது (Block shots). பொதுவாக இவர்களின் உயரம் 2.08 மீட்டர் முதல் 2.24 மீட்டர் வரை ஆகும்.

சில வீரர்களுக்கு இரண்டு நிலைகளில் விளையாடமுடியும். இரட்டை பின்காவல் (Combo guard) என்பவர் பந்துகையாளி பின்காவலின் உயரத்தில் புள்ளிபெற்ற பின்காவல் மாதிரி மற்ற வீரர்களுக்கு இலகுவாக்கருதுக்கு பதில் முதலில் புள்ளிகளை பெற்ற பார்ப்பார்கள். அசையாளர் (Swingman) புள்ளிபெற்ற பின்காவலாவும் சிறு முன்நிலையாவும் விளையாடமுடியும். பந்துகையாளி முன்நிலை (Point forward) என்பவர் முன்நிலை மாதிரி உயரமாக கூடைக் கிட்ட விளையாடமுடியும், ஆனால் பந்துகையாளி பின்காவல் மாதிரி பந்தை கையாளித்து மற்றவருக்கு இலகுவாக்கருத்த முடியும். முன்-நடு நிலைகள் (Forward-center) வலிய முன்நிலையிலும் நடு நிலையிலும் விளையாடமுடியும்.

சில நிலைமைகளின் இந்த நிலைகளை மாற்றமுடியும்.

[தொகு] ஆட்ட நேரம்

இரண்டு 20 நிமிட பகுதிகளாக ஆடப்படும். ஐந்து முறை தப்பாட்டம் ஆடும் வீரர் அந்த ஆட்டத்திலிருந்து விலக்கப்படுவார். சில இடங்களில் ஒரு ஆட்டத்தை நான்கு 12 நிமிடப் பகுதிகளாகவும் பிரித்து ஆடுவதுண்டு. என். பி. ஏ.-யில் இந்த வழக்கம் பயன்படுகிறார்கள். இவ்வாறு ஆடும் போது ஆறு முறை தப்பாட்டம் ஆடும் வீரர் ஆட்டத்திலிருந்து விலக்கப்படுவார்.

[தொகு] ஒலிம்பிக்ஸ் நிலவரம்

ஆண்களுக்கான கூடைப் பந்தாட்டம் 1936-ஆம் ஆண்டிலும், பெண்களுக்கான ஆட்டம் 1976-ஆம் ஆண்டிலும் ஒலிம்பிக்ஸில் சேர்க்கப்பட்டது. 1992 முதல் முழு நேர கூடைப் பந்தாட்டக்காரர்களும் ஒலிம்பிக்ஸில் விளையாட அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஒலிம்பிக்ஸில் இறுதிப் போட்டி பெரும்பாலும் ஐக்கிய அமெரிக்காவிற்கும் (U.S.A.), சோவியத் யூனியன்/ரஷ்யா விற்கும் இடையே தான் நடக்கும். ஐக்கிய அமெரிக்கா 12 முறையும், சோவியத் யூனியன் இரு முறையும், யுகோஸ்லாவியா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

[தொகு] வரலாறு

கனடாவில் பிறந்து ஐக்கிய அமெரிக்காவில் மஸ்ஸாசூசெட்ஸ் நகரில் வாழ்ந்த முனைவர் ஜேம்ஸ் நெய்ஸ்மித் என்பவர் பால்கனியில் கூடையைத் தொங்கவிட்டு அதில் பந்தை போட முயன்று விளையாடியதில் 1891ல் இந்த விளையாட்டு பிறந்தது. இன்றை நாள் வட அமெரிக்காவில் மிகப்பெரிய கூடைப்பந்து சங்கம் என். பி. ஏ. ஆகும். ஸ்பிரிங்ஃபீல்ட், மாசசூசெட்ஸ்-இலிருந்த கூடைப்பந்து புகழ்ச்சி சபை உலகில் மிக உயர்ந்த வீரர்களும் பயிற்றுனர்களும் துதிக்கிரது.

Static Wikipedia 2008 (March - no images)

aa - ab - als - am - an - ang - ar - arc - as - bar - bat_smg - bi - bug - bxr - cho - co - cr - csb - cv - cy - eo - es - et - eu - fa - ff - fi - fiu_vro - fj - fo - frp - fur - fy - ga - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - jbo - jv - ka - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - ms - mt - mus - my - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nn - -

Static Wikipedia 2007 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -
https://www.classicistranieri.it - https://www.ebooksgratis.com - https://www.gutenbergaustralia.com - https://www.englishwikipedia.com - https://www.wikipediazim.com - https://www.wikisourcezim.com - https://www.projectgutenberg.net - https://www.projectgutenberg.es - https://www.radioascolto.com - https://www.debitoformativo.it - https://www.wikipediaforschools.org - https://www.projectgutenbergzim.com