கிறிஸ்த்து
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கிறிஸ்த்து அல்லது கிறித்து என்ற தமிழ்ப் பதம் கிரேக்க மொழி சொல்லான Χριστός (கிறிஸ்தோஸ்), என்ற ஆசிர்வதிக்கப்பட்டவர் என்ற பொருளுடைய சொல்லில் இருந்து தமிழுக்கு எழுத்துப் பெயர்ப்பு செய்யப்பட்டதாகும். இச் சொல் எபிரேய மொழிப் பதமான מָשִׁיחַ (மெசியா) என்பதன் கிரேக்க மொழிப்பெயர்ப்பாக வழங்கப்பட்டது. இது இயேசுவுக்கு புதிய ஏற்பாட்டில் வழங்கிய ஒரு புனைப்பெயராகும்.
இயேசு கிறிஸ்த்து என பல முறைகள் விவிலியத்தில் இயேசுவின் பெயர் குறிக்கப்படுவதால்,இது சிலவேலைகளில் இயேசுவின் குடும்பப் பெயராக பிழையாக கருதப்படுவதும் உண்டு. ஆகவே இப்பெயர் "கிறிஸ்து இயேசு" என மாற்றிய வடிவிலும் பாவணையில் உள்ளது. இயேசுவை பின்பற்றியவர்கள் இயேசுவை கிறிஸ்த்து என நம்புகிறபடியாலேயே அவர்களுக்கு கிறிஸ்த்தவர் என்ற பெயர் உண்டாயிற்று. யூதர்கள் கிறிஸ்த்து இன்னமும் உலகிற்கு வரவில்லை என நம்புகின்றனர் மேலும் அவர்கள் கிறிஸ்த்துவின் முதலாவது வருகைக்காக காத்திருக்கின்றனர். கிறிஸ்தவர்களோ மாறாக கிறிஸ்த்துவின் இரண்டாம் வருகைக்காக காத்திருக்கின்றனர்.
[தொகு] பெயரின் தோற்றம்
கிறிஸ்து என்ற பதம் புதிய ஏற்பாட்டில் கிரேக்க மொழியில் இயேசுவை விபரிக்கும் படியாக இது பயன்படுத்தப்பட்டுமையாலேயே அது தமிழில் பாவணைக்கு வந்தது. எபிரேயே மொழியில் இருந்து கிரேக்க மொழிக்கு மொழிப்பெயரிக்கப்பட்ட முதலாவது விவிலியங்களில் ஒன்றான செப்டுஅஜிண்ட் விவிலியம் மெசியாக் என்ற எபிரேய பதத்தை மொழிபெயர்க்கும் வித்ததில் பயன்படுத்தியது இதன் பொருள் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்லது ஆசிர்வதிக்கப்பட்டவர் என்பதாகும். ஆசிர்வதிக்கப்பட்டவர் என்பது விவிலிய நோக்கில் தலைமை குரு, தலைவர், ஆட்சியாளர் என்ற பொருளையும் கொள்ளும்.
மற்றொரு எடுகோளின் படி, கிறிஸ்த்து என்ற பெயரானது இந்து கடவுளான கிறிஷ்ணரின் பெயரில் இருந்து தோன்றியதாகும். இது இவ்விருவரது இவ்வுலக வாழ்வில் காண்ப்படும் ஒற்றுமைகளை கொண்டு நிறுவப்பட்டதாகும். உதாரணமாக இவ்விரு கதைகளிலுமே குழந்தையாக இருந்த போது ஒரு அரசன இவர்களை அழிக்கும் நோக்கில் குழந்தைகளை கொல்கிறான். மேலும் இவர்களின் சாவிலும் சில ஒற்றுமைகள் காணப்படுகிறது கிருஷ்ணர் பாதத்தில் இரும்பாணி பதித்த அம்பு பாய்ந்து மரணிக்கிறாக கிறிஸ்த்து சிலுவையில் இரும்பாணிகளால் அறையப்பட்டு மரணிக்கிறார்.