கட்டற்ற மென்பொருள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கட்டற்ற மென்பொருள் அமையத்தின் வரைவிலக்கணப்படி, கட்டற்ற மென்பொருள் என்பது, எந்தவிதமான கட்டுப்பாடுகளும் தடைகளும் அற்று பயன்படுத்த, நகலெடுக்க, கற்க, மாற்றம் செய்ய, மீள விநியோகிக்கப்படக்கூடிய மென்பொருளாகும். மென்பொருட்களுக்கான கட்டுப்பாடுகளிலிருந்து விடுதலையுறுதலே இக்கருத்துருவத்தின் அடிப்படையாகும்.
கட்டற்ற மென்பொருள் என்பதற்கு எதிர் நிலையிலுள்ளவை தனியுரிமை மென்பொருட்களாகும் ( proprietary software). மென்பொருட்களை விலைக்க்கு விற்றல் என்பது கட்டற்ற மென்பொருள் தத்துவத்தின் படி தவறான செயல் அல்ல.
பொதுவாக மென்பொருள் ஒன்று கட்டற்ற மென்பொருளாக விநியோகிக்கப்படுவதற்கு, அம்மென்பொருளானது கட்டற்ற மென்பொருள் உரிம ஒப்பந்தம் ஒன்றோடு விநியோகிக்கப்படுகிறது. அத்தோடு, இருமக்கோப்புக்களாக வழங்கப்படும் மென்பொருட்களுக்கு, அவற்றின் ஆணைமூலமும் சேர்த்தே விநியோகிக்கப்படுகிறது.
பொருளடக்கம் |
[தொகு] விளக்கம்
"கட்டற்ற மென்பொருள் என்பது "விடுதலை" யோடு சம்பந்தப்பட்ட விடயம். சமூகத்திற்கு பயனுள்ள எல்லா வழிகளிலும் ஒரு மென்பொருளை
பயன்படுத்துவதற்கு மக்களுக்கு எந்த கட்டுப்பாடுகளும் இருக்கக்கூடாது."
தம்மை பயன்படுத்த(தொழிற்படுத்த), நகலெடுக்க, விநியோகிக்க, கற்க, மாற்றங்கள் செய்ய, மேம்படுத்த அனுமதிக்கும் மென்பொருட்கள், கட்டற்ற மென்பொருட்கள் எனப்படும். (பார்க்க: மென்பொருள்)
இது நான்குவகையான தளையறு நிலைகளை பயனர்களுக்கு வழங்குகிறது.
- தளையறு நிலை 0 - எத்தகைய நோக்கத்திற்காகவும் மென்பொருளை தொழிற்படுத்துவதற்கு /பயன்பத்துவதற்கான தளையறு நிலை.
- தளையறு நிலை 1 - (அம்)மென்பொருள் எவ்வாறு தொழிற்படுகிறது என்பதை கற்றுக்கொள்ளவும், உங்கள் தேவைகளுக்கேற்ப அதனை உள்வாங்கிக்கொள்ளவும் தடுக்காத தளையறு நிலை. ஆணை மூலத்தை பார்வையிட அனுமதித்தல் இதற்கான முன்னிபந்தனை
- தளையறு நிலை 2 - நகல்களை மீள்வினியோகம் செய்வதற்கான தளையறு நிலை. இதன்மூலம் நீங்கள் உங்கள் அயலவர்களுக்கு உதவமுடியும்.
- தளையறு நிலை 3 - மென்பொருளை மேம்படுத்துவதற்கும், மேம்பாடுகளை பொதுமக்களுக்கு வெளியிடுவதற்குமான தளையறு நிலை. இதன்மூலம் மொத்த சமுதாயமும் பயன்பெறுகிறது. இவ்வாறு விநியோகிக்கப்படும் மென்பொருள்களின் ஆணைமூலம் பார்வைக்கு வழங்கப்பட வேணும் என்பது இதற்கான முன்நிபந்தனை
ஒரு மென்பொருள், பயனாளர்களுக்கு மேற்கண்ட எல்லா தளையறு நிலைகளையும் வழங்கும்பட்சத்திலேயே அது கட்டற்ற மென்பொருள் எனக் கொள்ளப்படும்.
இத்தகைய மென்பொருட்களின் நகல்களை, மாற்றங்கள் செய்யப்பட்டநிலையிலோ அல்லது மாற்றம் எதுவும் செய்யாமலோ, இலவசமாகவோ, கட்டணங்கள் பெற்றுக்கொண்டோ, எங்கேயும் எவருக்கும் மீள்விநியோகம் செய்வதற்கு நீங்கள் எவருடைய அனுமதியையும் பெற்றுக்கொள்ளத் தேவையில்லை. செய்யும் மாற்றங்கள் பற்றி எவருக்கும் அறிவிக்க வேண்டிய கட்டாயமும் இல்லை.
மென்பொருளை பயன்படுத்துவதற்கான தளையறுநிலை என்பதால் குறிப்பிடப்படுவது யாதெனில், எவராலும், எந்த நிறுவனத்தாலும், எந்த கணினித் தொகுதியிலும், எந்தப்பணிக்காகவும், தயாரிப்பாளருடன் எத்தகு தொடர்புகளையும் பேணாமலேயே குறிப்பிட்ட மென்பொருளை பயன்படுத்தலாம் என்பதாகும்.
நகல்களை விநியோகிக்கும்போது, இருமக்கோப்புகளையும், அவற்றுக்கான ஆணை மூலத்தினையும் (பார்க்க: ஆணைமூலம்) கட்டாயமாக உள்ளடக்க வேண்டும். இருமக்கோப்புகளை உருவாக்க சில மொழிகள் அநுசரணை வழங்குவதில்லை என்ற காரணமும் இருப்பதால், இருமக்கோப்புக்களை வழங்குவது எல்லா வேளைகளிலும் கட்டாயமல்ல.
[தொகு] பல்வேறுப்பட்ட உரிமங்கள்
BSD
GNU/GPL
MIT
[தொகு] வெளி இணைப்புகள்
- கட்டற்ற மென்பொருள் விபரக்கொத்து
- கட்டற்ற மென்பொருள் அமையம்
- http://www.opensourcewindows.org/
- The best free softwares for Windows XP and Windows Vista